ஊராட்சி மன்றத் தலைவர் - ஊத்துக்குளி. திரும.தி.ப்ரியா சங்கர்சாமி

திருமதி.S.ப்ரியா சங்கர்சாமி அவர்கள் 09.12.1980-ல் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகேயுள்ள அருகம்பாளையம் கிராமத்தில் திரு.சென்னியப்பன்-திருமதி.சாந்தாமணி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். உயர்நிலைக் கல்வி வரை பயின்றுள்ளார். தான் பிறந்த அதே ஊரைச்சேர்ந்த தன் உறவினரான திரு.சங்கர்சாமி (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) காதலித்து கரம்பற்றிய இத்தம்பதியினருக்கு S.கௌதரன் மற்றும் S.மோகன்ராஜ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
தன்னைக் கரம்பற்றிய ஒரே காரணத்தால் தன் காதல் கணவர் இழந்தது ஏராளம். தன் வாழ்க்கையே தொலைந்தது என்ற நிலையில், கணவரின் தான தர்மங்களைக் கைப்பிடித்து மேலே வந்தவரிடம், சமுதாய பெண்கள் கற்க வேண்டிய பாடம் ஏராளம். தன் குடும்பம் இழந்தது கோடிகளில் என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதிதுக்கொள்ளலாம், ஆனால் அவர் இழந்தது தன் இரு அன்பு செல்லங்களின் கல்வியையும் தான். கடவுளின் கடைக்கண் பார்வை மட்டும் கிட்டியிருந்தால் இன்று ஒரு கிரிக்கெட் வீரனின் தாயாக வலம் வந்திருப்பார்.அவரின் வலியையும், வேதனையையும் நினைத்துப் பார்க்கிறோம். நம் இனத்தில் வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் மீட்சி பெற மூன்றாம் தலைமுறையாய் முட்டிமோதி விக்கி நிற்க, இவரோ கணவருக்கு தோள் கொடுத்து விழுந்த வேகத்தில் எழுந்து நிற்கிறார்.
பொதுவாழ்க்கை இவருக்கொன்றும் புதிதல்ல. கணவனை கரம்பிடித்த நாள் தொட்டு அரசியல் கலக்காத நாட்கள் ஒருசிலவே இருந்திருக்கும். தன் கணவர் 4 முறை ஒன்றிய கவுன்சிலர் என்பதால் கால்நூற்றாண்டு அரசியலை அருகிலிருந்து கண்ணுற்றிருப்பார் என்பது இயல்பு தானே? இதுவரை கணவருக்கு குடும்பத்திலும், தொழிலிலும்,அரசியலிலும் சுக துக்கங்களிலும் தோள்கொடுத்து வந்தவர், இந்த முறை தேர்தல் களத்திலும் இறங்கி வெற்றிபெற்று, அதிலும் அவருக்கு தோள்கொடுக்க தயாராகிவிட்டார்.
கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அணைப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக களமிறங்கி, தன் கணவரின் பெற்ற நாங்கு வெற்றிகளில் ஒன்றைக்கூட்டி ஐந்தாவது வெற்றியையும் சாத்தியப்படுத்தியுள்ளார். அவர் மென்மேலும் பலவெற்றிகளைப்பெற்று சமுதாய வரலாற்றில் சாதனை மங்கையாக திகழ அன்புடன் வாழ்த்துகிறோம்.