அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - கரூர்.திரு.M.அண்ணாதுரை
திரு.M.அண்ணாதுரை அவர்கள் 21.06.1962-ல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, அருகேயுள்ள கரடிபட்டி என்ற கிராமத்தில் திரு.S.மல்லையன் – திருமதி.M.முத்தம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவர் மேல்நிலைப் பள்ளி கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.A. ரேவதி என்ற மனைவியும் திரு.A.அருண்குமார், திரு.A.ஆனந்தகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சமுதாயத்திலும், திராவிட இயக்க அரசியலிலும் நீண்ட நெடிய பாரம்பரியமும், புகழுக்கும் உரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் திரு.அண்ணாதுரை அவர்கள். திராவிட இயக்கத்தில் தீவிர பற்றுக்கொண்ட காரணத்தால் இவரின் தந்தை திரு.S.மல்லையன் (இவர் பற்றிய விரிவான விவரங்களைய அறிய நீல நிற எழுத்தின் மீது விரல்வைக்கவும்) அவர்கள் தன் மகனுக்கு அண்ணாதுரை என்ற பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூர்வீகமாக திராவிட முன்னேற்ற கழகத்துடன் இரண்டரக்கலந்து விட்ட அரசியல் குடும்பமாக இருப்பதால், இவரும் குழந்தைப் பருவத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இயல்பாகிப்போனது என்றால் மிகையல்ல. தனது பள்ளிப் படிப்பை முடித்த கணத்திலிருந்து நேரடி அரசியலில் தீவிரமாக பங்கெடுத்தவர், இவர் 1990 ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அரவக்குறிச்சி நகர செயலாளராக தொடர்ந்து 6 ஆவது முறையாக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2006 முதல் 2011- வரை அரவக்குறிச்சி பேரூராட்சித் தலைவராக பதவிவகித்துள்ளார். திரு.அண்ணாதுரை அவர்கள் பேரூராட்சித்தலைவராக பொறுப்பு வகித்த காலகட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாய வரலாற்றில் மேற்கு மண்டலத்திலிருந்து இதுவரை திமுக-வில் பொதுக்குழு உறுப்பினராக பதவிவகித்த ஒரே நபர் என்ற பெருமைக்குறியவர் திரு.அண்ணாதுரை அவர்கள். கரூர் மாவட்டக் கழகத்தின் முன்னனி தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கும் திரு.அண்ணாதுரை அவர்கள், கட்சி அறிவிக்கும் பல்வேறு போராட்டங்களிலும், மறியல்களிலும் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.மேலும் அரவக்குறிச்சி சுற்றியுள்ள பகுதிகளில் கம்பளத்தார்கள் வசிக்கும் பகுதிகளில் அடித்தட்டு மக்களிடம் கழகத்தைக் கொண்டு சென்றவர்களில் திரு.அண்ணாதுரை அவர்களின் பங்கு மகத்தானது.
கட்சி அரசியல் தாண்டி சமுதாயத்தின் மீதும் பற்றுள்ளவர், அப்பகுதியில் நடைபெறும் சமுதாய நிகழ்வுகள் அனைத்திலும் பங்கெடுத்துக்கொள்வார். கரூர் மாவட்டத்திற்குள் நுழையும் எந்த சமுதாய அமைப்பும் திரு.அண்ணாதுரை அவர்களை தவிர்த்துவிடமுடியாது. அவரின் அறிமுகத்தோடே உட்கிராமங்களுக்கு செல்லமுடியும் என்ற அளவில் மக்களோடு பின்னிப் பிணைந்தவர் திரு.அண்ணாதுரை அவர்கள். மேலும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் நீண்டகால பாரம்பரியமும், பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றிய அனுபவமுடைய திரு.அண்ணாதுரை அவர்கள், அரசியலில் மேலும் பல உயரங்களை தொட்டு, சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.