🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊராட்சி மன்றத் தலைவர்-வைப்பார்.திருமதி.சக்கம்மாள் இராமர்

திருமதி.சக்கம்மாள் இராமர் அவர்கள் 10.02.1978-ல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள வைப்பார் கிராமத்தில் திரு.கருத்தப்பாண்டி நாயக்கர் – திருமதி.இராமலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். தொடக்கப்பள்ளி அளவில் கல்வி பயின்றுள்ளார். அதே ஊரைச்சேர்ந்த திரு.இராமர் (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்)அவர்களை மணபுரிந்துள்ள இத்தம்பதியினருக்கு R.மகேந்திரகுமார், R.இராஜேந்திர கார்திக்குமார் மற்றும், R.சதீஸ்குமார் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.


கணவரின் விவசாயம் மற்றும் அவரின் பல்வேறு தொழில்களுக்கு உதவி வருபவர், தற்பொழுது அரசியலுக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார். தனது கணவர் திரு.இராமர் அவர்கள் விஜயகாந்த் அவர்களின் இரசிகர் மன்றத்தலைவராக இருந்து இயன்றதைச் செய்வோம்-இயலாதவர்களுக்கு என்ற கொள்கைப்படி, அவரின் நற்பணிகளை வெளியிலிருந்து பார்த்துவந்துள்ளார். மேலும் தேமுதிக வில் விளாத்திக்குளம் ஒன்றிய அவைத்தலைவராகவும் கட்சிப்பணியாற்றியதை அருகிலிருந்து பார்த்துள்ளார். இருமுறை தன் கணவர் தேர்தல் களம் கண்டபொழுது, அதற்கு உதவிகரமாக இருந்து களப்பணியும் ஆற்றியுள்ளார் திருமதி. சக்கம்மாள் அவர்கள். அந்தவகையில் நற்பணிமன்ற அரசியலிலிருந்து, தேர்தல் அரசியல் வரை அனைத்தையும் அறிந்தே வந்துள்ளார்.


தன் கணவர் இருமுறை களம் கண்டு பறிக்க இயலாத வெற்றிக்கனியை, தான் போட்டியிட்ட முதல் வாய்ப்பிலேயே, 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத்தேர்தலில் வைப்பார் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக களமிறங்கிய திருமதி.சக்கம்மாள் அவர்கள் வெற்றிவாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   கம்பளத்தாரின் தேவதையான சக்கதேவியின் பெயரைக் கொண்டுள்ள வைப்பார் தலைவர் திருமதி.சக்கம்மாள் இராமர் அவர்கள், தனது பணியை சிறப்பாக செய்திட வேண்டுமாய் அண்டுடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved