ஊராட்சி மன்றத் தலைவர் - தூத்துக்குடி.திரு.M.பாலசுப்பிரமணியன்

திரு.M.பாலசுப்பிரமணியன் அவர்கள், 10.04.1980-ல் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் திரு.R.முருகேசன் திருமதி M.சுப்புலெட்சுமி தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி B.சுமதி என்ற மனைவியும் மகன் B.மகேந்திரகுமார் மகள் B. அருள்செல்வி உள்ளனர்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக லாரி டிரைவராக பணியாற்றிவரும் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் பொதுவாழ்க்கைக்கு புதியவர்பொருளாதார பின்புலம் ஏதுமின்றி, சாதாரண லாரி டிரைவரான திரு.பாலசுப்பிரமணியன், மிகுந்த தன்னம்பிக்கையுடன், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், சுமார் 600 வாக்களர்களை கொண்ட தமிழகத்திலேயே மிகச்சிறிய ஊராட்சியான தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சிமன்ற வேட்பாளராக, எக்கட்சி அடையாளமுமின்றி சுயோட்சையாக, களம் கண்டு 8 முனைப்போட்டியில் இரண்டே இரண்டு வாக்குகள் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, களமிறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொட்டிய நாயக்கர் இணையதளத்திற்காக தகவல்களை சேகரிக்க தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும், அரசியல் பிரபலங்களிடம் தகவல் திரட்டுகையில், அவர்களிடம் ஒரு தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் உள்ளதைக்காண முடிந்தது. அரசியலில் தங்களால் ஊராட்சி மன்றத் தலைவர் தாண்டி அதிக பட்சம் ஒன்றியக்குழு உறுப்பினரளவிலேயே வெற்றி பெற முடியும் என்ற அவநம்பிக்கையே அனைவரிடமும் உள்ளது. அவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டுவதுபோல் உள்ளது சிலரது வெற்றி. அதில் முதன்மையானவர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்களின் வெற்றி.
இந்த ஊராட்சியில் பாதிக்கும்மேற்பட்டவர்களாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும், அதற்கு அடுத்தபடியாக ஒருகுறிப்பிட்ட சமுதாயத்தினரும் உள்ளனர். இவர்கள் பெரும்பான்மையினர் மட்டுமல்ல, அக்கிராம நிலங்களின் உரிமையாளர்களும் கூட. கம்பளத்தார் சமுதாய வாக்குகள் வெறும் 50 வாக்குகள் மட்டுமே என்பதும் அதில் ஒருவரிடம் கூட நிலபுலன்கள் கிடையாது என்பதும் கவனிக்க வேண்டிய விசயம். தலைவர் வேட்பாளராக களம் கண்ட திரு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு சொந்த நிலம் கூட கிடையாது, தினக்கூலி அடிப்படையிலான லாரி டிரைவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பரம்பரை பரம்பரையாக அரசியல் செய்பவர்களும், மிட்டா- மிராசுகளும் போட்டியிட்டு களத்தில் திக்கித்திணறி சிலர் வெற்றி பெறுவதும், சிலர் பெற முடியாமல் போவதும் நம் கண் முன்னே நடக்கும் உண்மை. ஆனால், சரியான திட்டமிடலாலும், சாதுரியத்தாலும், கம்பளத்தார்கள் இதுவரை போட்டியே இடாத இடத்தில், வாக்குகள் அடிப்படையில் கம்பளத்தார் வெற்றி பெற வாய்ப்பேயில்லாத இடத்தில் வெற்றி பெற்ற இமாலய சாதனையைச் செய்துள்ளார் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள். அரசியலில் இந்த துணிச்சலும், சாதுர்யமும் தான் அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்லும் என்பதை, தமிழக அரசியலுள்ள சில அரசியல் பிரபலங்களின் மூலம் அறியலாம்.
அந்தவகையில் எல்லோருக்கும் முன்னுதாரணமாக, தெற்கு சிலுக்கன்பட்டியில் முதல் கம்பளத்து தலைவராக பொறுப்பேற்கும் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள், தனது சீரிய பணியின் மூலம் மக்களின் மனதில் நீங்க இடம்பெறும் வகையில் பணியாற்றி, தன் வெற்றியை வரும் காலங்களிலும் தக்கவைத்து, சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொண்டு, வாழ்த்துகிறோம்.