அரியப்பம்பாளையம் அரசியல் ஆணிவேர் திரு.துரைசாமி!
திரு.P.R.துரைசாமி அவர்கள் –ல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பெரியூர் கிராமத்தில் திரு.ரங்க நாயக்கர் – திருமதி.மாரக்காள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் உயர்நிலைப்பள்ளி கல்விவரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.ராஜம்மாள் என்ற மனைவியும் D.சுமதி, D.வனிதா, D.பரிமளா என்ற மூன்று மகள்களும், D.வெங்கடாசலம் என்ற மகனும் உள்ளனர்.
எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகராக இருந்த திரு.துரைசாமி அவர்கள், எம்ஜிஆர் அவர்கள் அஇஅதிமுக-வை தொடங்கியதைத் தொடர்ந்து, 1973-இல் அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 1980-ல் அரியப்பம்பாளையம் பேரூராட்சி கிளைச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 1993-இல் அரியப்பம்பாளையம் பேரூராட்சி அம்மா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டு 1996-வரை அப்பதவியில் நீடித்தார். 2003-ல் அரியப்பம்பாளையம் பேரூராட்சி கழகச்செயலாளராக பணியாற்றினார். திரு.துரைசாமி அவர்கள் கட்சி சார்பில் நடைபெறும் போராட்டங்கள், மறியல்கள், பொதுக்கூட்டம் போன்றவற்றில் தவறாமல் பங்கெடுத்து வருகிறார்.
1977-ல் உள்ளாட்சித்தேர்தலில் களம் கண்ட திரு.துரைசாமி அவர்கள் அரியப்பம்பாளையம் வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாறினார். 1996-இல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அரியப்பம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டு தேல்வியைத் தழுவினார். அதன்பின் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் மீண்டும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று சிறப்பாகப் பணியாற்றினார். 2006-ல் அரியப்பம்பாளையம் ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்ந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் அரியப்பம்பாளையம் பேரூராட்சியின் 15-வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015-இல் தனது ஒரே மகனை பறிகொடுத்த திரு.துரைசாமி அவர்கள் ஒருசில வருடங்கள் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். சுமார் 50 ஆண்டுகாலம் அரசியலில் நீண்டநெடிய பயணம் செய்த திரு.துரைசாமி அவர்களுக்கு புரட்சித்தலைவி அம்மா முதல் உள்ளூரில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் அறிமுகமும், நேரடித் தொடர்பும் கொண்டிருந்தவர். 1996-இல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தல்தளிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்திருந்த்து. இதுகுறித்து கட்சித்தலைமை ஆய்வுக்கூட்டம் நடத்திய தோல்விக்கான காரணங்கள் குறித்த விவாத்தில் பேசிய திரு.துரைச்சாமி அவர்கள், கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகம் தொண்டர்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் எவ்வளவு அந்நியப்பட்டிருந்தது என்பதை செல்வி.ஜெயலலிதா அவர்களிடம் சற்றும் தயங்காமல் நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படி துணிச்சலும், அரசியல் அனுபவமும் மிக்க திரு.துரைசாமி அவர்களின் சேவை கட்சிக்கு தொடர்ந்து தேவைப்படவே, கட்சி அவருக்கு ஓய்வளிக்காமல் அரவணைத்துக்கொண்டு அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கழக அவைத்தலைவர் பதவி வழங்கி கௌரவித்தது. அப்பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.
அரியப்பம்பாளையம் அரசியலோடு பல பல ஆண்டுகளாக தொடர்ந்து தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருந்து வரும் திரு.துரைசாமி அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராகவும், பேருராட்சி கவுன்சிலராகவும், பெருந்தலைவராகவும் பணியாற்றிய காலங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவம், குடியிருப்பு, மின்மயானம், தெருவிளக்கு அமைத்தல் போன்ற அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி அரியப்பம்பாளையம் வரலாற்றுப்பக்கங்களில் நீங்காத இடம்பெற்றுள்ளார்.
அரசியல் தவிர சமுதாயப்பணியிலும் அமைப்புகளோடும், தலைவர்களோடும் இணைந்து பணியாற்றிவரும் திரு.துரைசாமி அவர்கள் ஆண்டு தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளன்று இராஜகம்பள மஹாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.P.S.மணி அவர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி சென்று மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவந்தவர்.
மிகமூத்த அரசியல் பிரமுகரன திரு.துரைசாமி அவர்கள் எதிர்வரும் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிளுக்கு நடைபெறும் உள்ளாட்சித்தேர்தலில் மீண்டும் பேரூராட்சித்தலைவராக பதவியேற்கவேண்டுமென்று வேண்டி வாழ்த்துகிறோம்.