🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் பிரபலங்கள் - ஆண்டிபட்டி.திரு.R.சக்திவேல்

திரு.R.சக்திவேல் அவர்கள் 14.10.1975 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள T.மல்லையாபுரம் கிராமத்தில் திரு.ராஜய்யா – திருமதி.பவுன்தாய் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். இவர் மேல்நிலைப்பள்ளி கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.கனி என்ற மனைவியும், S.சர்மிளா தேவி, S.சௌமியா தேவி, S.அட்சயா தேவி என்ற மூன்று மகள்களும், S.பிரிதிவி ராஜாஎன்ற மகனும் உள்ளனர்.

திராவிட இயக்கப்பற்றாளரான திரு.சக்திவேல் அவர்கள் 1993-இல் தனது 18-ஆவது வயதில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். தீவிர அரசியலில் தொடர்ந்தவர், தேர்தல் பிரச்சாரம், கழகக்கூட்டங்கள், மாநாடுகள், போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். திம்மரசநாயக்கனூர் ஊராட்சி திமுக பிரதிநிதியாக 2006 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு தனது பணியைத்தொடர்ந்தார்.தனது சிறப்பான பணியாளும், கட்சியின் மீதான விசுவாசத்தாலும் முன்னனி தலைவர்களின் அன்பைப்பெற்றவர், 2018-ல் ஒன்றிய பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அரசியல் மட்டுமல்லாது சமுதாய பணியிலும் அதிக ஈடுபாடு கொண்டவரான திரு.சக்திவேல் அவர்கள் 2016 முதல் 2018 வரை தமிழ் நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தில் மாவட்ட துணை செயலாளராக பணியாற்றினார். அதனை தொடர்ந்து 2018 முதல் 2021 வரை மாவட்ட செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். 

ஆண்டுதோறும் வீரபாண்டியகட்டபொம்மன் பிறந்தநாளன்று சமுதாய மக்களையும், இளைஞர்களையும் ஒன்றுதிரட்டி 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் பாண்பாட்டுக் கழக நிர்வாகிகளுடன் சென்று மதுரையிலுள்ள மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார். மேலும் தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள தொட்டிய நாயக்கர் வாழும் 126 கிராமங்களில் தொடர்ந்து ஒரு வாரகாலம் பயணித்து கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்ற அனைத்து சமூக மக்களிடமும் சகோதரபாசத்துடனும் எதார்த்த போக்குடனும் கள்ளங்கபடமின்றி பழகக்கூடியவர்.

கால்நூற்றாண்டுகாலம் தாண்டி தீவிர அரசியலில் இருந்தபோதிலும் தன் மீது எந்த சூழ்நிலையிலும் யாரும் குறைசொல்லாத அளவிற்கு நடந்து கொள்பவர். முதன்முறையாக நடந்துமுடிந்த 2021-சட்டமன்றத்தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர களப்பணியாளரான திரு.சக்திவேல் அவர்களின் விருப்பமனுவிற்கான வாய்ப்பு தற்பொழுது மறுக்கப்பட்டிருந்தாலும் காலம் அவரை நீண்டநாட்களுக்கு காத்திருக்க வைக்க முடியாது என்பதற்கு உதாரணமாக நடந்துமுடிந்த சட்டமன்றத்தேர்தலில் தான் சார்ந்திருக்கும் தொகுதி தாண்டி மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளிலும் தீவிர பணியாற்றியுள்ளார். திரு.சக்திவேல் அவர்களின் அரசியல் எதிர்காலம் வசந்தகாலமாக இருக்க வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved