🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - பவானி.திரு.K.ஜெயப்பிரகாஷ்

திரு.K.ஜெயப்பிரகாஷ் அவர்கள் 24.05.1972-ல் ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள உப்புக்கரைப்பள்ளம் என்ற கிராமத்தில் திரு.குப்புசாமி நாயக்கர் – திருமதி.புஷ்பவள்ளி தம்பதியினருக்கு, விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். இவர் உயர்நிலைக் கல்வியுடன் படிப்பை முடித்துக் கொண்டவர், தன் பெற்றொருக்கு உதவியாக விவசாயப்பணியில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.J.ஜானகி என்ற மனைவியும் Dr.J.விஜயகாண்டீபன்.BDS., என்ற மகனும் J.புஷ்பலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.


இவருடைய தந்தையார் திரு.குப்புசாமிநாயக்கர் அவர்கள் அஇஅதிமுக-வில் பவானி ஒன்றிய அவைத்தலைவராக பதவி வகித்தவர். ஆதலால், திரு.ஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு இளம் வயதிலிருந்தே அரசியல் ஈடுபாடு உண்டு. 1996-ல் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டவர், கிளைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்பில்சிறப்பாகசெயல்பட்டதால், அதற்கு அடுத்த நிலையில் ஊராட்சிக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டார், அன்றிலிருந்து இன்று வரை அப்பொறுப்பில் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.ஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு அரசியல் தன் இரத்தத்திலேயே ஊரிப்போன ஒன்றுதான் என்று சொல்லவேண்டும். சட்டமன்ற-பாராளுமன்றத் தேர்தல்கள் எதுவந்தாலும், இவர் ஊராட்சிக்கழக செயலாளராக பொறுப்பு வகிக்கும் பகுதிகளில் கட்சிக்கு அதிகவாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதில் கெட்டிக்காரர். இதனால் இவருக்கு கூடுதலாக ஈரோடு மாவட்டக்கழக இளைஞரணியின் இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிப் பொறுப்பிலிருந்தபொழுது 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், பவானிஒன்றியம், மகளிருக்குஒதுக்கப்பட்ட 16-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்புகிட்டியது. இதில் தன் துணைவியார் திருமதி.ஜானகிஜெயப்பிரகாஷ் அவர்களை களமிறக்கி ஆளும்கட்சிக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கினார். இருந்தாலும் ஆளும்கட்சியின் அசுரபலத்தின் முன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். தோல்வியால் சற்றும் மனம் தளராத திரு.ஜெயப்பிரகாஷ் அவர்கள் தொடர்ந்து கட்சிப் பணிகளிலும்,பொதுமக்கள் சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இந்த காலகட்டத்தில் ஏழை-எளியமக்களுக்கு அரசின் மானியங்களைப் பெற்றுத்தருதல், விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை மானியத்தில் பெற்றுத்தருதல், பட்டா இல்லாத ஏழைகளுக்கு பட்டா பெற்றுத்தருதல், ஊனமுற்றோருக்கு நிதிஉதவி, முதியோர் ஓய்வூதியம் என பல்வேறு சேவைகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தார். அரசியலில் சம்பாதிக்கவேண்டும் என எண்ணுகின்றவர்கள் மத்தியில், ஆலத்தூரில் கிராமத்திலுள்ள சுமார் 10 லட்சம் மதிப்புள்ள தன் சொந்தநிலத்தை அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்காக அரசு மருத்துவமனை கட்ட தானமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது கம்பளத்தார்களின் தனிக்குணம் என்றால் மிகையல்ல.


தன்னுடைய முன்னோர்களின் சொத்து-சுகங்களுக்கு மட்டும் தானோ, தனக்குப் பின் வரும் தலைமுறைகளோ வாரிசுகளல்ல, ஏழை-எளியமக்களுக்கு தங்கள் முன்னோர்களாற்றிய சேவைகளுக்கும் சேர்ந்தே வாரிசுகள் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, வழிகாட்டிடும் வகையில் பல் மருத்துவரான தன் மகன் டாக்டர்.விஜயகாண்டீபன் கல்லூரி படிப்பு முடித்த நிலையில், கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவசேவை மட்டுமல்லாது இலவசமாக மருந்து, மாத்திரைகளையும் வழங்கச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவப் படிப்பை பெரும் முதலீடாக மாற்றிவிட்ட இந்த கார்ப்ப்ரேட்சூழ் உலகில், மருத்தும் படித்துக் கொண்டிருக்கும் தங்கள் வாரிசுகளின் எதிர்காலம்பற்றி பெற்றோர்களின் கற்பனையும், அவர்களின் மனக்கோட்டையையும் அறியாதவர்கள் அல்ல நாம். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டபவராக, பொருளீட்டளை தன் இடக்கையால் தட்டிவிட்டு உயர்ந்து நிற்கிறார் திரு.ஜெயப்பிரகாஷ் அவர்கள்.

தன்னுடைய சேவையை உள்ளூரளவில் மட்டுமே செய்பவரல்ல திரு.ஜெயப்பிரகாஷ் அவர்கள்.தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வியாபித்திருக்கும் தான் பிறந்த சமுதாயத்திற்கும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணமுள்ளவர், தன்னால் நேரடியாக இப்பணியை மேற்கொள்ளமுடியாவிட்டாலும், அப்பணிகளில் ஈடுபட்டு வரும் விடுதலைக்களம், தவீகபகழகம் போன்ற பல்வேறு சமுதாய அமைப்புகளுக்கு தன்னாலான உதவிகளைச் செய்து ஊக்குவித்து வருகிறார். மேலும் அப்பகுதியில் மாவீரனின் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி  வருகிறார்.

அரசியல் பொதுவாழ்க்கையில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட திரு.ஜெயப்பிரகாஷ் அவர்கள், தனக்கான வாய்ப்பிற்காக நீண்டநாள் காத்திருக்கவும் தவறவில்லை. அந்தவகையில் 2006-தேர்தலுக்குப் பின் சுமார் 13-ஆண்டுக்கள் காத்திருந்து, எங்கு தன்துணைவியார் 2006-ஆம் ஆண்டு தேர்தலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டாரோ, அதே பவானி ஒன்றியம்16-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளராக கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் களமிறக்கி தன் துணைவியாரும், ஆலத்தூர் ஊராட்சி மேலவைப் பிரதிநிதியுமான திருமதி.ஜானகி ஜெயப்பிரகாஷ் அவர்களை வெற்றி பெறவைத்தார்.


ஈரோடுமாவட்டத்தில், கம்பளத்தார் சமுதாய மக்கள் மிக அதிக அளவில் இருந்தாலும், கட்சியில் பணியாற்றுபவர்கள் கிளைக்கழகம், ஊராட்சிக்கழக அளவிளான பதவிகளைத் தாண்டி ஒன்றிய, மாவட்ட அளவிளான பதவிகளைப் பெறுவதில் அதிக முனைப்புக் காட்டுவதில்லை என்ற கம்பளத்தாரின் ஏக்கத்தை, மாவட்டக் கழக இளைஞரணி இணைச்செயலாளர் பதவியைப் பெற்றதின் மூலம் அவர்களுக்கு ஒருநம்பிக்கை ஒளியைப் பாய்ச்கியுள்ளார். அவர் மேன்மேலும் அரசியலில் உயர் பதவிகளைப்பெற்று சமுதாயத்தினரின் ஏக்கதைப் போக்கவேண்டும் என்று அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved