ஊ.ம.துணைத் தலைவர் - முள்ளக்காடு. திரு.M.ராஜ்குமார்
திரு.M.ராஜ்குமார் அவர்கள் 27.04.1983-ல் தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் திரு.P.முருகன் நாயக்கர் – திருமதி.M.மூக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைக்கல்வி வரை பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தவர், பின் விவசாயப்பணியில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.R.வித்யா என்ற மனைவியும் R.ருத்திகா மற்றும் R.ருத்ரா என்ற இருமகள்களும் உள்ளனர்.
மாணவப்பருவத்திலிருந்தே திரு.வைகோ அவர்களின் பேச்சுகளில் கவரப்பட்டவர், மதிமுகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். மதிமுக நடத்தும் அனைத்து போராட்டங்கள்,மறியல்கள் என அனைத்திலும் கலந்து கொண்டு சிறைசென்றவர். தவிர மதிமுக நடத்தும் மாநாடுகள் எங்காயினும், பெரும் படையுடன் கலந்து கொள்பவர் திரு.ராஜ்குமார் அவர்கள். தீவிர களப்பணியாளராக, கழகத்தின் முன்னனி தலைவர்களின் அன்பைப்பெற்றவர் தூத்துக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தூத்துக்குடி ஒன்றிய மாணவரணிச் செயலாராக பொறுப்பேற்று, இன்றுவரை அப்பொறுப்பில் தொடர்கிறார். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டதின் மூலம் நேரடி தேர்தல் அரசியலில் களம் இறங்கியவர், முள்ளக்காடு ஊராட்சிமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத்தேர்தலில் அதே ஊராட்சிமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர், பின் முள்ளக்காடு ஊராட்சிமன்றத் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் தவிர ரியல்எஸ்டேட் தொழில் செய்துவரும் திரு.ராஜ்குமார் அவர்கள், புகழ்பெற்ற செட்டிநாடு சிமென்ட் ஆலைகளுக்குத் தேவையான ஜிப்சம் சப்ளையையும் செய்து வருகிறார்.அரசியல், தொழில்பணிகளுக்கு இணையாக சமுதாய பணியிலும் ஈடுபட்டு வருபவர். சமுதாயத்தில் வளர்ந்துவரும் இளம் அரசியல் தலைவரான திரு.ராஜ்குமார் அவர்கள், வரும் காலங்களில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.