ஒன்றிய துணைப் பெருந்தலைவர் -பவானிசாகர். திரு.M.பாலன்.B.E.,
திரு.M.பாலன்.B.E., அவர்கள் 13.08.1982-ல், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலூகா, பெரிய சாத்தனூர் கிராமத்தில், திரு.R.மல்ல நாயக்கர், திருமதி.M.ராமக்காள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த திரு. M.பாலன் அவர்கள் கட்டுமானத்துறையில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இவருக்கு திருமதி.B.சுகன்யா, M.Sc, B.Ed., என்ற மனைவியும் B.நேத்ரா என்ற மகளும், B.கிரிஷ்விக் என்ற மகனும் உள்ளனர்.
கல்லூரிப் படிப்பை முடித்தவர் சென்னையில் சிலகாலம் தனியார் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றினார். அதன் பின் தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்டாக கோவையிலும், சென்னையிலும் 2010-வரை பணியாற்றினார். பின்னர் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்ததாரக 2011 ஆம் ஆண்டு களமிறங்கியவர், பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் கட்டியுள்ளார். அரசு ஒப்பந்தத்தையே நம்பியிராமல், M/s.பாலா பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நிறுவி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் லேஅவுட் புரமோட்டர்ஸ், பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் & கன்சல்டிங் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார்.
மாணவப்பருவத்திலிருந்தே கட்சி அரசியலில் ஆர்வமுடையவர், 2006 ஆம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்து, அக்கட்சின் விண்ணப்பள்ளி கிளைக்கழக அவைத்தலைவராகவும், பின்னர் ஊராட்சிக் கழக செயலாளராகவும் திறம்பட செயலாற்றினார். கடந்த 2019 – டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அஇஅதிமுக சார்பில் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், 6-ஆவது வார்டு குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். கட்சியில் சுறுசுறுப்பாக பணியாற்றுவதுடன், படித்த பண்பட்ட இளைஞராக, அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பண்புகளைக் கொண்டவருக்கு, இந்த வெற்றியின் மூலம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தின் துணைப்பெருந்தலைவர் என்ற மணிமகுடம் கிட்டியது. இதன்மூலம், பவானிசாகர் ஒன்றியத்தில் கம்பளத்தாரில் முதல் துணைப்பெருந்தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார் திரு.M.பாலன் அவர்கள்.
திரு.பாலன் அவர்களின் இந்த வெற்றியும், புதிய பொறுப்பும், அரசியலில் ஈடுபடும் நம் சமுதாய இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தனக்குக்கிடைத்த இந்த பொன்னான அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அப்பகுதில் அரசியலில் உள்ள சமுதாய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்குவதுடன், மேலும் பலகிராமங்களில் சமுதாயத்தினர் வரும்காலங்களில் வெற்றிபெற வழிவகை செய்திட வேண்டும் என்று அன்புடன் வேண்டி, திரு.பாலன் அவர்கள் அரசியலில் மேலும் பல வெற்றிகளை ஈட்டி சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட வாழ்த்துகிறோம்.