ஊராட்சி மன்றத் தலைவர் - ஈசநத்தம். திரு.M.N.இராமசாமி
திரு.M.N.ராமசாமி, 1969 ஆம் வருடம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஈசநத்தம் கிராமத்தில், திரு.M.நாகுசாமி நாயக்கர், திருமதி.பாப்பத்தி அம்மாள் தம்பதினருக்கு, விவசாய குடும்பத்தில், மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவர் B.A., வரை படித்துள்ளார். இவருக்கு சி.புஸ்பலதா என்ற மனைவியும், ஆர்.ஸ்ரீவர்ஷிணி என்ற மகளும் உள்ளனர்.
பாரம்பரிய திமுக குடும்பத்தில் பிறந்தவர். கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் முதல் முதலில் குளித்தலை சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டபொழுது அவருக்காக தீவிர பிரச்சாரம் செய்தவர், இவருடைய தந்தையார் திரு.நாகுசாமி நாயக்கர். திரு.நாகுசாமி நாயக்கர் அவர்கள் 1969 முதல் 1993 வரை நடைபெற்ற அனைத்து ஊராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியின்றி ஒருமனுதாக ஊராட்சிமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர். ஈசநத்தம் ஊராட்சி 1996-ல் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொழுது, திரு. நாகுசாமி அவர்களின் மகள் திருமதி.இராஜம்மாள் அவர்கள் ஊராட்சி மன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்படிப்பட்ட அரசியல் பாரம்பரிய மிக்க குடும்பத்திலிருந்து வந்த திரு.M.N. இராமசாமி அவர்கள், 2006, 2011, 2019 என தொடர்ந்து மூன்று முறை ஈசநத்தம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புகழுக்குறியவர். திரு. M.N. ராமசாமி அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றிய 2009-2010 ஆண்டுகளில் தீண்டாமை கடைபிடிக்காத ஊராட்சிக்கான மாவட்ட ஆட்சித்தலைவர் விருதும், நேர்மையான ஊராட்சி நிர்வாகத்திற்கான முதலமைச்சர் விருதும், சுகாதாரத்திற்கான இந்திய ஜனாதிபதி விருதும், நேர்மையான, வெளிப்படையான பஞ்சாயத்து நிர்வாகத் திறமைக்காக பிரதமர் விருதும் பெற்று, ஒட்டுமொத்த கம்பளத்தாருக்கும் பெருமை சேர்த்தவர். பல்வேறு புகழுக்கும், விருதுக்கும் சொந்தக்காரரான திரு.ராமசாமி அவர்கள் அரசியலில் மேலும் சிகரங்களைத்தொட்டு சாதனைகள் புரிந்திட வாழ்த்துகிறோம்.