ஊராட்சி மன்றத் தலைவர் - கோவில்வீரார்பட்டி. திருமதி.பூச்சம்மாள் தங்கப்பாண்டியன்

திருமதி.பூச்சம்மாள் தங்கப்பாண்டியன், அவர்கள் 1976-ல் விருதுநகர் மாவட்டம், கரியபட்டி அருகேயுள்ள நாகம்பட்டி கிராமத்தில் திரு.வெ.அழகர்சாமி நாயக்கர் –திருமதி.அ.பெருமாளக்காள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். கோவில்வீரார்பட்டியைச் சேர்ந்த திரு.தங்கப்பாண்டியன் அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.M.தங்கபாண்டியன் அவர்கள் 1958-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், கோவில் வீரார்பட்டி கிராமத்தில் திரு க. முத்துநாகு நாயக்கர்- திருமதி மு.கோப்பம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை விருதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், இளங்கலை (B.A.,) பட்டத்தை விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியிலும் பெற்றார். 1980-ஆம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து அரசியலில் அடியெடுத்து வைத்தவர், காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராகவும், வட்டாரத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
1982 ஆம் ஆண்டு முதல் சத்துணவு சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றியவர், தன் குடும்ப விவசாயத்தையும் கவனித்துக்கொண்டு, கல்வியியலில் (B.Ed) பட்டம் பெற்றார். கற்றுக்கொள்வதில் அதீத ஆர்வமிக்கவர், தனது 54 ஆவது வயதில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் பட்டதாரி ஆசிரியருக்கான சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று மானாமதுரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர், 2016 ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இளம் வயதிலிருந்தே சமுதாய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வமிக்கவராக இருந்தார். அதனால் மக்கள் சேவையில் இயல்பிலேயே அக்கரை கொண்டவர், தன் ஓய்வுகாலத்தை மக்களுக்குப் பணியாற்ற அர்ப்பணித்துக்கொண்டார். கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கோவில்வீரார்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் வேட்பாளராக தனது துணைவியார் திருமதி த. பூச்சம்மாள் தங்கப்பாண்டியன் அவர்களை களமிறக்கி வெற்றிவாகை சூடியுள்ளார்.
தன் ஓய்வுகாலத்தை மக்களுக்காக உழைக்க முடிவெடுத்து, அதில் முதல்கட்ட வெற்றியையும் பெற்றுள்ள திரு.தங்கப்பாண்டியன் தம்பதியினர், தங்களின் சிறப்பான சேவையால் மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து, சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.