ஒன்றியக்குழு உறுப்பினர் - அருப்புக்கோட்டை. திருமதி.கலையரசி வரதராஜ்
திருமதி.கலையரசி வரதராஜ் அவர்கள் 03.06.1986-ல் விருதுநகர் அருகேயுள்ள சீனியாபுரம் கிராமத்தில் திரு.பழனிச்சாமி-திருமதி.பாண்டிரத்தினம் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார் இவர் மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திரு. லெனின் என்கிற வரதராஜ் அவர்களை மணமுடித்துள்ள திருமதி. கலையரசி அவர்களுக்கு, வ.ராகவி என்ற மகளும் வ.வ.முகேஷ் என்ற மகனும் உள்ளனர்.
திருமதி.கலையரசி அவர்களின் கணவர் திரு.வ.லெனின் என்கிற வரதராஜ் அவர்கள் 10.06.1977-ல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவனத்தம் கிராமத்தில், திரு.சி.வரதராஜன் நாயக்கர் – திருமதி.கலீவீரம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தவர். இவரது தந்தை திரு.சி.வரதராஜன் அவர்கள் பாலவனத்தம் கிராமத்தில் Post Master ஆக பணியாற்றியவர். உயர்நிலைப் பள்ளிக் கல்வியுடன் படிப்பை நிறுத்திக்கொண்ட திரு.லெனின்-வரதராஜ் அவர்கள், தற்போது, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில், ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
மாணவப்பருவத்திலிருந்தே திராவிட இயக்க அரசியலில் ஆர்வமுடையவர், 1996 முதல் திமுக-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து பணியாற்றி வருகிறார். அதன் தொடர்ச்சியாக 2012-ம் ஆண்டில் திமுகழக பாலவனத்தம் ஊராட்சிக் கிளை செயலாளராக பொறுப்பேற்று இன்றுவரை அப்பதவியில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். திமுகழகத்தின் தொழிற்சங்கப் பிரிவான தொமுச-வில் உறுப்பினரான திரு.லெனின்-வரதராஜ் அவர்கள், கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்துவருகிறார்.
சிறந்த தொழிற்சங்கவாதியான தன் கணவர் திரு.லெனின்-வரதராஜ் அவர்களின் அரசியல் அனுபவத்தையும், சேவையையும், கட்சிக்கும், சொந்த கிராம மக்களுக்கும் பயன்படுத்திடும் பொருட்டு, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அருப்புக்கோட்டை ஒன்றியம் 3-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளராக திமுக சார்பில், களமிறங்கி வெற்றிவாகை சூடியுள்ளார் திருமதி.கலையரசி வரதராஜ் அவர்கள். ஜனநாயகத்தின் அச்சாணியாக இருக்கும் அரசியல் களத்தில், சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், அரசியல்வாதியாகவும் கம்பளத்தார் சமுதாயத்தில் உருவெடுத்துவரும் திரு.லெனின்-வரதராஜ் அவர்களும், தன் கணவரின் அரசியல் பயணத்திற்கு தோள்கொடுக்கும் வகையில்,, அவரின் கனவை நனவாக்க தேர்தல் களத்தில் களம்கண்டு வெற்றியை சமுதாயத்திற்கு சமர்ப்பித்துள்ள திருமதி.கலையரசி வரதராஜ் அவர்களும், மேலும் பல வெற்றிகளைப் பெற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட அன்புடன் வாழ்த்துகிறோம்.