🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்றியக்குழு உறுப்பினர்-அந்தியூர். திருமதி. ராஜலட்சுமி நாகேஷ்வரன்

திருமதி.ராஜலட்சுமி நாகேஷ்வரன் அவர்கள் ஈரோடு மாவட்டம், அந்தியூர் - பிரம்மதேசம் அருகேயுள்ள புதுகரடியானூர் கிராமத்தில் திரு.N சின்னுசாமி - திருமதி. நாகேஸ்வரி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை பயின்றுள்ள திருமதி. ராஜலட்சுமி அவர்கள் திரு.R.நாகேஷ்வரன் (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களை மணம் புரிந்துள்ளார். இத்தம்பதியினருக்கு N.லோகேஸ்வரன்.B.E., N,மகேஸ்வரன்.B.Tech,MBA., என்ற இரு மகன்களும் உள்ளனர்.


திருமதி.ராஜேஷ்வரி அவர்களின் தாத்தா G.R. ரங்க நாயக்கர் அவர்கள் 1956 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் புதுக்கரடியனூர் உள்ளாட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதிலிருந்து அவரின் குடும்ப பின்னனியும், பாரம்பரியமும் எளிதில் விளங்கும். திருமணத்திற்கு முன்பிருந்தே பொதுவாழ்வில் இருப்பவரான திரு.நாகேஷ்வரனை மணந்தவர். ஆதலால் குடும்ப நிர்வாகத்துடன், விவசாயம் மற்றும் கணவரின் தொழில் சார்ந்த விசயங்களையும் ஆரம்பகாலம் முதலே கவனித்தில் கொள்ளவேண்டியது இயல்பாகவே அமைந்திருக்கும் என்றே சொல்ல வேண்டும்.

திரு.நாகேஷ்வரன் அவர்கள் 1986 முதல் 1996 வரை திமுகவில் ஒன்றிய பொருளாளராக பதவி வகித்த காலம் என்பது திமுக பல போராட்டங்களையும், சோதனைகளையும் சந்தித்த காலம் என்பது அரசியலை அறிந்தவர்கள் நன்கு அறிவர். இதில் 1989-91 வரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியாக இருந்துள்ளது. 1991-முதல் 1996 வரை, குறிப்பாக முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி அவர்களின் மரணத்திற்குப்பின் திமுகழகம் சந்தித்த சோதனைகள் ஏராளம். அப்படியான காலகட்டத்தில் கணவரின் பொதுவாழ்விற்கு ஆதராவாக இருந்து, குடும்ப நிர்வாகத்தையும் சிறப்புடன் நடத்தி, தன் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்தியதின் விளைவாக, தன் இரு மகன்களையும் சிறந்த பொறியாளராக்கியுள்ளார் என்பதை இன்றைய சமுதாய மகளிர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி. இதைக்  குறிப்பிடக் காரணமில்லாமல் இல்லை. திமுகழக வரலாற்றில் 1996 வரை கட்சிக்காக உழைத்து சொத்து, சுகங்களையும்,குடும்பங்களையும்  இழந்தவர்கள் அதிகம் என்பதே வரலாறு. அதில் விதிவிலக்காக திரு,நாகேஷ்வரன் குடும்பம் திகழ்கிறது என்றால், அந்த வெற்றியின் பின்னனியில் திருமதி. ராஜலட்சுமி அவர்களின் அர்ப்பணிப்பும், உழைப்பும் இருந்திருக்கும் என்பதை அனுமானிப்பதில் அதிக சிரமம் ஏதுமிருக்க முடியாது.

தன் நிர்வாகத்திறமையையும்,பன்முகத்தன்மையையும் குடும்ப அளவில் இதுவரை வெளிப்படுத்தி வந்தவருக்கு, இப்பொழுது அரசியல் களத்திலும் சாதிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. தன் தாத்தா காலத்திலிருந்தே மூன்று தலைமுறையாக பொதுவாழ்வை பார்த்து வளர்ந்தவருக்கு அரசியல் ஒன்றும் புதிதல்ல. மேலும் கணவர் போட்டியிட்ட இரு தேர்தல்களிலும் தீவிர களப்பணியாற்றிய அனுபவமிக்கவர் திருமதி.ராஜேஷ்வரி அவர்கள்.


கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அந்தியூர் ஒன்றியம் 13 வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் நேரடி அரசியலில் களமிறங்கி வெற்றி பெற்றதின் மூலம் தன் பாட்டனார் திருG.R.ரங்க நாயக்கரின் சாதனையும், சரித்தரத்தையும் நிலைநிறுத்தியுள்ளார் திருமதி.ராஜேஷ்வரி அவர்கள். பொதுவாழ்விலும் சாதித்து சமுதாயப் பெண்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்பார் என்பதில் ஐய்யம் ஏதுமில்லை. திருமதி.ராஜலட்சுமி நாகேஷ்வரன் தம்பதியினர் பொதுவாழ்வில் மேலும் பல சாதனைகளை செய்து, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved