🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் -அந்தியூர். திரு.R.நாகேஷ்வரன்.B.Sc.,

திரு.R.நாகேஷ்வரன்.B.Sc., அவர்கள் 23.04.1962 -ல் ஈரோடு மாவட்டம், அந்தியூர் பிரம்மதேசம் அருகேயுள்ள குந்துகாலம் பாளையம் கிராமத்தில் திரு. ராஜு என்கிற ராம நாயக்கர்- திருமதி.ரங்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் தொடக்கக்கல்வியை பிரம்மதேசத்தில் புகழ்பெற்ற BSN மேனேஜ்மென்ட் பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை அந்தியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றவர், ஈரோடு, வாசவி கலைக்கல்லூரியில் 1984-ல் இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி திருமதி.N.ராஜலட்சுமி (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) என்ற மனைவியும் N.லோகேஸ்வரன் B.E., N,மகேஸ்வரன்.B.Tech., MBA., என்ற இரு மகன்களும் உள்ளனர்.


மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கப் பாசறையில் வளர்ந்தவர், தன் கல்லூரி படிப்பை முடித்த பின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தீவிர களப்பணியாற்றினார். தன் சொந்த கிராமத்தின் கிளைக்கழக செயலாளராக அரசியல் பயணத்தை தொடங்கியவர், மிகக்குறுகிய காலத்தில் 1986-ல் ஒன்றியக் கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 லிருந்து 1996 வரை, தொடர்ந்து பத்தாண்டுகள் அப்பதவியில் நீடித்தார். அதிமுக வின் அசைக்க முடியாத கோட்டையாக இருக்கும் ஈரோடு மாவட்டத்தில், எம்ஜிஆர் அவர்கள் நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்றவந்த நிலையில், 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளராக பிரம்மதேசம் ஊராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். மீண்டும் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அஇஅதிமுக ஆட்சியில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் 13 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதிமுகவின் கோட்டையில், அதுவும் அக்கட்சி ஆட்சியில் இருந்து அசுரபலத்துடன் நடத்தும் தேர்தல்களில், தோல்வியை கண்டு அஞ்சாமல், ஏற்றுக்கொண்ட இயக்கத்தின் கட்டளையை ஏற்று போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பொழுதிலும், மனம்தளராமல் தொடர்ந்து பொதுவாழ்வில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

விவசாயம், அரசியல் தவிர தொழில்துறையிலும் அதிகநாட்டமுடையவர், அந்தியூர் பகுதிகளில் பிரபலமான செங்கள்சூளை தொழிலும் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, 2000-மாவது ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 20 ஆண்டுகளாக அந்தியூர் வட்டார செங்கள் சூளை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட இராஜ கம்பளத்தார்கள் செங்கள் சூளை உரிமையாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 20000 க்கும் மேற்பட்ட பல்வேறு சமுதாய மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், பொருளாதர மேம்பாடும் கிட்டச்செய்துள்ளார் திரு.நாகேஷ்வரன்.


இது சென்னை அண்ணாநகர், அமைந்தகரை பண்பை ஒத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சென்னை- அண்ணாநகர், செனாய்நகர், சூளைமேடு, அமைந்தக்கரை, முகப்பேர் வரையுள்ள பகுதிகள் சுமார் 25 ஆண்டுகள் முன்புவரை செங்கல்சூளை தொழிலுக்கு பிரதானமான இடமென்பதும்,அவை அனைத்தும் ஒருகுறிப்பிட்ட சமுதாய மக்களின்  கட்டுப்பாட்டில் இருந்ததென்பதும், அத்தொழிலில் ஈடுபட்டவர்களே பின்நாட்களில் மிகப்பெரிய செல்வந்தர்களாக, அரசியல்வாதிகளாக, தொழிலதிபர்களாக மாறினர் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

இப்படிப்பட்ட செங்கள்சூளை தொழிலுக்கு சுற்றுச்சூழல் துறை, வருவாய்த் துறை மற்றும் கனிமவளத்துறை என பல்வேறு துறைகளிலிலிருந்தும் பல்வேறு காலங்களில், பல்வேறு நிலைகளில் சோதனை வந்தபோதெல்லாம்,செங்கள் சூளை உரிமையாளர்கள்,தொழிலாளர்களை  ஒன்று திரட்டி போராடியத்தின் மூலம் அப்பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை காப்பாற்றியதோடில்லாமல், அப்பகுதின் வளமைக்கும் வழிவகுத்துள்ளார். மேலும் ஸ்ரீ அருள் என்ற பெயரில் நிதி நிறுவனமும் நடத்தி வருபவர், செங்கள்சூளை மற்றும் அதுசார்ந்த மோட்டார் வாகனத்துறையில் தொழில் துவங்க முன்வருபவர்களுக்கு தகுந்த ஆலோசனையும், நிதியுதவியும் அளித்து வருகிறார்.

விவசாயம், தொழில், அரசியல் என பல்வேறு பணிகளில் இருந்தாலும், சமுதாயத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். 2005-ஆம் ஆண்டு முதல் தொட்டிய நாயக்கர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் (பின்நாட்களில் இது விடுதலைக்களமாக மாறியது) ஈரோடு மாவட்டத்தலைவராக இருந்து வருகிறார். இந்த அமைப்பின் மூலம் வருடம் தோறும் தைத்திருநாள் அன்று அம்மாவட்டத்தில் சமுதாயத்தினர் வாழும் அனைத்து கிராம மக்களையும் தைத்திருநாளன்று ஒன்றிணைத்து, மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவையும், பத்தாம் வகுப்பு மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களப்பெற்ற மாணவ-மாணவியருக்கு, சமுதாய பெரியோர்களைக்கொண்டு பரிசுகள் வழங்கியும், பொருளாதரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சீருடை, நோட்டுப்புத்தங்கள் வழங்கியும், சமுதாய ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் அயராது பாடுபட்டு வருகிறார்.

செங்கள் சூளை உரிமையாளர் சங்கத்தின் தலைவராக திரு,நாகேஸ்வரன் அவர்களின் சீரிய முயற்சியால், அந்தியூர் சுற்றுவட்டாரப்பகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கட்டுமானத்திற்குத் தேவையான செங்கற்களை சூளை உரிமையாளர்களின் சங்கத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதி அரசு பள்ளிகளின் தோற்றம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக காணப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளின் சேர்க்கை விகிதம் மற்ற பகுதிகளைக்காட்டிலும் கூடுதலாக உள்ளது என்பது சிறப்புக்குறியது.


இப்படி 1984-ல் பொதுவாழ்வில் அடியெடுத்துவைத்த நாள் முதல் இன்றுவரை சுமார் 35 ஆண்டுகளுக்குமேலாக தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய நலன் சார்ந்து உழைக்கும் திரு,நாகேஸ்வரன் அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அந்தியூர் ஒன்றியம் 13 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட திருமதி.ராஜலட்சுமி நாகேஸ்வரன் அவர்களை பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்துள்ளனர் என்பது குறுப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிமுக வின் கோட்டை என்று சொல்லப்படும் ஈரோடு மாவட்டத்தில், எங்கு தான் வேட்பாளராக திமுக வின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை தவறவிட்டாரோ, அதே தொகுதியில், இம்முறையும் திமுக எதிர்க்கட்சியாக உள்ளநிலையில், தன் துணைவியாரை களமிறக்கி வெற்றிபெறச் செய்ததின் மூலம் தன் ஆளுமையை உலகுக்கு பறைசாற்றியுள்ளார் என்றால் மிகையல்ல.

தொடர்ந்து தன் அயராத உழைப்பை சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் அர்ப்பணித்து வரும் திரு,நாகேஸ்வரன் அவர்கள் மேன்மேலும் பலவெற்றிகளை பெற்று, வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வழிநடத்த வேண்டும் என்று அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved