மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்- அரவக்குறிச்சி.திருமதி.இந்திரா புகழேந்தி
திருமதி.இந்திரா புகழேந்தி அவர்கள் 1983 ஆம் வருடம் நாமக்கல் மாவட்டம் பொம்மக்குட்டைமேடு அருகேயுள்ள மேற்கு பாலப்பட்டி கிராமத்தில் திரு.பொம்முலு நாயக்கர் – திருமதி.முத்தம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். இவர் நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள தடாகோவில் திரு.S.புகழேந்தி (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்)அவர்களை மணமுடித்துள்ள திருமதி.இந்திரா அவர்களுக்கு P.சுஜித் என்ற மகனும், P.மோனிகா சரண் என்ற மகளும் உள்ளனர்.
2006-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனது கணவர் திரு.புகழேந்தி அவர்கள் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி மன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பத் தொழிலான விவசாயத்தையும், குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார். தவிர, கணவரின் மோனிகா கார்மென்ட்ஸ் மற்றும் P.S. என்ற நிதி நிறுவனத்திலும் பங்குதாரராகவுள்ளார். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த தன் கணவரின் அரசியலுக்கு துணைநின்றவர், 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டம், 11 ஆவது வார்டு மாவட்டக்குழு உறுப்பினர் வேட்பாளராக அஇஅதிமுக சார்பில் களமிறங்கி வெற்றிவாகை சூடியுள்ளார்.
இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தில் கொங்கு மண்டலம் எனப்படும் மேற்கு மாவட்டங்களிலுள்ள ஒரே பெண் மாவட்டக் கவுன்சிலர் என்பதும், தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ள ஒருசில மாவட்டக் கவுன்சிலர்களில் திருமதி.இந்திரா புகழேந்தியும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியலில் நமது சமுதாய மகளிர் பங்களிப்பு பிரதானமானது. அந்த வகையில் மாவட்ட கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி.இந்திரா புகழேந்தி அவர்கள், மேலும் பல உயரங்களைத் தொட்டு, சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட அன்புடன் வாழ்த்துகிறோம்.