அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் -அரவக்குறிச்சி. திரு.S.புகழேந்தி
திரு.S.புகழேந்தி அவர்கள் 10.11.1975-ல் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள தடாகோவில் கிராமத்தில் திரு.சுப்பையன்-திருமதி.மல்லிகா தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் மேல்நிலைப்பள்ளி கல்வி பயின்ற நிலையில் விவசாயப் பணியில் ஈடுப்பட்டவர். இவருக்கு திருமணமாகி திருமதி.இந்திரா (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) என்ற மனைவியும் P.சுஜித் என்ற மகனும், P.மோனிகா சரண் என்ற மகளும் உள்ளனர்.
விவசாயம் தவிர பொதுவாழ்விலும் ஆர்வமுடையவர், அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பொதுவாழ்வை தொடங்கினார். 2006-ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006-ல் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவிவகித்த காலத்தில் இந்திய ஜனாதிபதி அவர்களின் சிறந்த சுகாதாரத்திற்கான விருதை ஜனாதிபதி திரு.APJ அப்துல்கலாம் அவர்களிடமிருந்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.புகழேந்தி அவர்களுக்கு விவசாயம்,அரசியல் பணிகளுக்குடையே தொழில் துறையிலும் நாட்டம் கொண்டவர், மோனிக கார்மென்ட்ஸ் என்ற பெயரில் டெக்ஸ்டைல்ஸ் துறையிலும், P.S. என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிதி நிறுவனமும் நடத்திவருகிறார்.
கடந்த டிசம்பர்-2019-ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத்தேர்தலில் தனது துணைவியார் திருமதி. இந்திரா புகழேந்தி அவர்களை கரூர் மாவட்ட 11 ஆவது வார்டு மாவட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் களமிறக்கி வெற்றிபெறச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சமுதாயதிலுள்ள ஒரே மாவட்ட கவுன்சிலர் என்ற பெருமையைப் பெருகிறார் திருமதி. இந்திரா புகழேந்தி அவர்கள். இந்த புதிய பொறுப்பின் மூலம் திரு.புகழேந்தி தம்பதியினர் சாதி, மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.