🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்- அருப்புக்கோட்டை. திரு. A.காசிராஜ் M.A.,

திரு.A.காசிராஜ் M.A.,அவர்கள் 26.12.1973-இல், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தில் திரு. அழகர்சாமி – திருமதி.பாண்டியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அரசியல் அறிவியல் (Political Science ) துறையில் முதுகலை பட்டம் பெற்றவரான திரு. காசிராஜ் அவர்களுக்கு திருமணமாகி திருமதி.K.இராமலெட்சுமி என்ற மனைவியும், K.தேன்மொழி  என்ற மகளும்,  K.ஜவகர் என்ற மகனும் உள்ளனர்.


அதிமுக பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவரான திரு.காசிராஜன் அவர்கள், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகராக, கால்சட்டைப் பருவத்திலேயே தன் அரசியல் பயணத்தை தொடங்கினார். இளமைக்கால பள்ளி மாணவனாக, நண்பர்கள் புடைசூழ, கழகக்கொடியை கையில் ஏந்தியபடி, சொந்தகிராமத்தில் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார கிராமங்கள் தோறும் தேர்தல் பிரச்சார நடைபயணங்கள் மேற்கொண்டு வாக்குசேகரிக்கும் பணியில் முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு தீவிர களப்பணியாற்றினார். இதனால் தனது 19 ஆவது வயதிலேயே கிளைக்கழக பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கபட்டார்.

பின்பு திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட  வைகோ அவர்கள்  மறுமலர்ச்சி திமுகவை தொடங்கிய பொழுது, வைகோ அவர்களின் பேச்சாற்றளால் கவரப்பட்டு மறுமலர்ச்சி திமுகவில் தொடக்ககால உறுப்பினராக  இணைத்துக்கொண்டார். அதுமுதல் மீண்டும் தீவிர அரசியலை தொடர்ந்தவர், திருச்சியில் நடைபெற்ற முதல் மாநில மாநாடு முதல் பெரும்பாலான மாநாடுகள், நடைபயணங்கள், பொதுக்கூட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திலும் பங்கேற்றுள்ளார்.

வீரத்தின் விளைநிலமாம், பாஞ்சை வேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு  கயத்தாறு மண்ணில் நடைபெறும் புகழஞ்சலி விழாவில் வைகோ அவர்களுடன் ஆண்டு தோறும் கலந்து கொள்வதை வாடிக்கையாகக் கொண்டவர்.

2005இல் புதிய டவேரா கார் வாங்கியபொழுது முதல் பயணத்தை வைகோ அவர்களே தொடங்கி வைக்க வேண்டுமென்ற உறுதியுடன் இருந்து, தன் புதிய காரில் வைகோ அவர்களுடன்  விருதுநகர் முதல் சாத்தூர் வரை பயணம் செய்து வாழ்த்துக்கள் பெற்றவர்.

கிளைப் பிரதிநிதி, கிளைச் செயலாளர், ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் மற்றும் மாவட்ட பிரதிநிதி என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி வைகோ அவர்களிடம் பாராட்டு பெற்றவர். அது மட்டுமல்லாது வைகோ அவர்களை  நேரடியாக சந்தித்து பேசும் வாய்ப்பை பெற்றவராகவும் திகழ்ந்தார். சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக அமைச்சர் மாண்புமிகு KKSSR ராமசந்திரன் அவர்கள் வாக்குகள் சேகரிக்க தங்கள் பகுதி வந்த பொழுது திரு.காசிராஜன் அழைப்பின் பேரில் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துவந்து தேநீர் விருந்தளித்து உபசரித்து மகிழ்ந்தார். 

கட்சி அரசியல் தாண்டி, கல்விரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள சமுதாய மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற அதிக அக்கரை கொண்டவர். தன் அரசியல் பணிகளுக்கிடையே சமுதாய தொண்டையும் தொடர வேண்டும் என்ற தேவையை உணர்ந்த  திரு.காசிராஜன் அவர்கள்,தமிழ்நாடு வீரபண்டிய கட்ட பொம்மன் நினைவு கல்வி அறக்கட்டளையில் இணைந்து பணியாற்ற தொடங்கி, பின்பு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தில் விருதுநகர் மாவட்ட தலைவர், மாநில துணைச் செயலாளர் போன்ற பொறுப்புகளில் சிறப்புற பணியாற்றியவர். அதை தொடர்ந்து  2009 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இதழின் வெள்ளி விழா மலர் வெளியீட்டின் பொழுது விருதுநகர் மாவட்ட குழுவில் இருந்து திறன்பட பணியாற்றியவர். 


சமுதாய தலைவர்களிடம் நெருங்கிய தொடர்பும், சமுதாய நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்வதும் இவரின் தனிச்சிறப்பு.பள்ளி மாணவர்களில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும், உயர் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டுவதை கடமையாக கொண்டு செயல்படுபவர். அதுமட்டும் அல்லாது அவர்களை விளையாட்டுகளிலும் ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கி வந்துள்ளார். பாஞ்சாலங்குறிச்சி விழா மற்றும் மதுரையில் நடைபெறும் வீர பாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவிற்கு பல முறை வாகனம் மற்றும் உணவு வசதி ஏற்பாடு செய்துகொடுத்து சமுதாய மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர்.அத்துடன் மதுரை மன்னர் கல்லூயில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளைக்கு 5000 ரூபாய் நன்கொடை வழங்கியும் சிறப்பு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மாவட்ட அரசியலில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு, தன் பேச்சாற்றாலால் தனிமுத்திரை பதித்தவரான திரு.காசிராஜன், இராஜகம்பள சமுதாயத்தில் புறக்கணிக்கமுடியாத வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவர்களில் மிக குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இவர் இல்ல திறப்பு விழாவிற்கு வைகோ அவர்கள்(அமெரிக்காவில் இருந்ததால்) வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், பாராளுமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் அழகு சுந்தரம் ஆகியோரை  தன் சார்பில் கலந்து கொள்ளச்செய்தது, கட்சியிலும், தலைமையிலும் திரு.காசிராஜனின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
 
2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மகளிருக்கு ஒதுக்கப்பட்ட செட்டிகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக திருமதி.இராமலெட்சுமி காசிராஜன் அவர்கள் வெற்றி பெற தீவிர களப்பணியாற்றி வெற்றி கண்டவர்.



ஊராட்சி மன்ற தலைவரான தன் துணைவியாருக்கு உறுதுணையாக இருந்து, புதிய நூலகம், சிமெண்ட் சாலை,தார்ச்சாலை,பாலங்கள், வாய்க்கால்,குளம் ஆழப்படுத்தல்,குடி தண்ணீர் மேல்நிலை தொட்டி, குடி தண்ணீர் குழாய்,கைபம்ப்பு, பள்ளி காம்பவுண்ட்சுவர் , மயானம் கட்டுமானம் போன்ற பணிகளுடன் சிறப்பான நிர்வாகம் நடைபெறவும், சுகாதாரத்திற்காக மேதகு ஜனாதிபதி அவர்களின் “நிர்மல் கிராம் புரோஷ்கார் ” விருது பெறவும் முக்கிய காரணமாக இருந்தவர்.இதை அறிந்த வைகோ அவர்களும் பாராட்டி மகிழ்ந்தார்.

பாஞ்சாலங்குறிச்சி விழாவில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கலந்து கொண்ட விழா மேடையில் உணர்ச்சி பொங்க உரையாற்றி சமுதாய மக்களின் ஏகோபித்த பாராட்டுப் பெற்றவர். நாஞ்சில் சம்பத் மற்றும் வைகோ அவர்களின் உடன் பிறந்த தம்பி இரவிச்சந்திரன் ஆகியோரை தன் வீட்டுக்கு அழைத்து, விருந்தோம்பல் அளித்து அவர்களின் அன்பைப் பெற்றவர். பல பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியதால் இவரின் திறமையைக் கண்டு ஒன்றிய செயலாளர் பொறுப்பு தேடி வந்தபோதும் அதை ஏற்க மறுத்தார்.
பின்பு தேர்தல் கூட்டணி முடிவுகளால்  அதிருப்தி கொண்டு  தன் தாய் கழகமாம் அண்ணா திமுகவில் மீண்டும் இணைந்தார்.சிறந்த மேடைப்பேச்சாளரான திரு.காசிராஜன், கழக பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு தன் நாவன்மையால் கழக முன்னனித்தலைவர்களின் அன்பைப்பெருவதற்கு அதிககாலம்பிடிக்கவில்லை. 

பேச்சாற்றலை மட்டுமே நம்பி அரசியலை தொடராமல், சாமானிய மக்களையும், தொண்டர்களையும் ஒருங்கிணைத்து புரட்சி தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு அம்மா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் கழக ஆண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டு செயல்படுபவர். அதேபோல் இந்த இருபெரும் கழக தலைவர்களின் நினைவு நாளில் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்துவதையும் தொடர்ந்து செய்து வரும் வழக்கம் கொண்டவர். கட்சிப்பணியில் பலபரிமாணங்களில் பணியாற்றிய திரு.காசிராஜனுக்கு விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.



கிடைக்கும் வாய்ப்புகளிலும், வாய்க்கும் சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்திக்கொள்வது திறமையான அரசியல் வாதிக்கு அழகு. கம்பளத்தார் சமுதாயத்தில் அப்பொடியொரு திறமையுடையவரான திரு.காசிராஜன், 15-07-2018 இல் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி K. பழனிசாமி அவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பைப்பெற்றபொழுது, தமிழக முதல்வர் இவருக்கு கை கொடுத்து வாழ்த்தியது திரு.காசிராஜனின் திறமைக்கு சான்று.

2019 இல் நடந்த பாராளுமன்ற தேர்தல் பணியில் மண்டல பொறுப்பாளராக கூட்டணி வெற்றிக்காக தீவிர பணியாற்றினார். கடந்த 2019 – டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அருப்புக்கோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், கழக பொதுக்கூட்டங்களிலும், சமுதாய அமைப்புகளின் கூட்டங்களிலும் சிறப்பு பேச்சாளராக தொடர்ந்து பேசி வருகிறார்.

தற்போது விருதுநகர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார்.நடந்து முடிந்த 2021 சட்ட மன்ற தேர்தலில் திரு வைகைச் செல்வன் அவர்களோடு சீரிய களப்பணி ஆற்றியவர். திரு.காசிராஜன் அவர்கள் அரசியலில் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved