ஊராட்சி மன்றத் தலைவர் - உக்கரம். திரு.M.முருகேசன்
திரு.M.முருகேசன் அவர்கள் 14.04.1976-ல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள உக்கிரம் கிராமத்தில் திரு.முத்துநாயக்கர் - திருமதி.திம்மக்காள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியளவில் படித்தவர் விவசாயப் பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.கவிதா என்ற மனைவியும் M.ரூபாஸ்ரீ , மற்றும் M. மதுமிதா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
விவசாயம் தவிர சுயதொழிலும் நாட்டமுடையவர்,அப்பகுதி விவசாயிகளிடம் வாழைக்காய் நேரடி கொள்முதல் செய்து கேரள மாநிலத்திற்கு விற்பனை செய்து வருகிறார். பூர்வீக திராவிட இயக்கப் பாரம்பரியத்தின் மீது பற்றுள்ள குடும்பத்தில் இருந்து வந்தவரான திரு.முருகேசன் அவர்கள், சிறுவயது முதலே திமுகழக ஆதரவாளராகவும்,பின் அடிப்படை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக தீவிர கட்சிப்பணியாற்றி வரும் திரு.முருகேசன் அவர்கள், பொதுமக்களும், ஏழை-எளிய மக்களும் உதவிகோரி வரும்பொழுது உதவுவதுடன், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றிட தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அனைத்து தரப்பு மக்களுடனும் அன்பு பாராட்டுபவர், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு கோவில் வேண்டும் என்று கேட்டபொழுது ஒத்த கருத்துடைய அனைவரையும் ஒருங்கிணைத்து முன்னின்று நிறைவேற்றிக்கொடுத்து சமூக நல்லிணக்கம் உருவாக காரணமாக இருந்தவர் திரு.முருகேசன் அவர்கள். இதுதவிர விவசாயப் பெருமக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு நம்பி நாடிச்செல்லும் வகையில் நம்பிக்கையைப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலம்காலமாக திமுக ஆதரவாளராக இருந்தபொழுதும் தேர்தல் அரசியல் பக்கம் செல்லாதவர், முதன்முதலாக, கடந்த 2019-ஆண்டு, டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் உக்கரம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்ட திரு.முருகேசன் அவர்கள் மகத்தான வெற்றி பெற்று உக்கரம் ஊராட்சி மன்றத் தலைவராகியுள்ளார்.
பதவி ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டுவரும் அரசியல்வாதிகள் மத்தியில், எந்த பொறுப்பையும் எதிபார்க்காமல், நீண்டகாலம் காத்திருந்து, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு, பொறுமையும், நிதானமும் அவசியம் என்று சொல்லப்படுவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என்றால் மிகையல்ல. இந்த புதிய பொறுப்பின் மூலம் திரு. முருகேசன் அவர்கள், சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.