வளரும் அரசியல் நட்சத்திரம் - பொள்ளாச்சி - திரு.G.தர்மபிரகாஷ்
திரு.G.தர்மபிரகாஷ் அவர்கள் 29.04.1984-இல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆர்.பொன்னாபுரம் கிராமத்தில் திரு.கணேசன் – திருமதி.தேவமனோகரி தம்பதியினருக்கு விவசாய குடுபத்தில் மகனாக பிறந்தார். இவர் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பொறியியல் பட்டயம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.ராதா.M.B.A., என்ற மனைவியும் ஜீவித் என்ற மகனும் உள்ளனர்.
திரு.தர்மப்பிரகாஷ் அவர்கள் பாரம்பரியக்குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர். இவரின் தந்தை வழி பாட்டனார் திரு.மயில்சாமி அவர்கள் நகரமன்ற திட்ட அலுவலராக இருந்து புகழ்பெற்றவர்.திரு.மயில்சாமி அவர்கள் “பில்டிங் இன்ஸ்பெக்டர்” என்று அப்பகுதி மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர். அதேபோல் தாய் வழி பட்டனரான திரு.கந்தசாமி அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றியவர். மேலும் பொள்ளாச்சி பகுதி திமுக-வில் முக்கிய தலைவர்களில் 1970-90களில் வலம் வந்தவர். பல்வேறு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்க பாரம்பரியமாக இருந்தாலும் திரு.தர்மபிரகாஷ் அவர்கள் தேசியத்தின் மீது அதிக பற்றுகொண்டிருந்தார். ஆகையால் மாணவப் பருவத்திலிருந்தே ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (R.S.S) என்ற அமைப்பில் இணைந்து பணியாற்றியவர், இந்து முன்னனி தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2003 ஆம் ஆண்டிலிருந்து பா.ஜ.க கட்சியில் இணைந்து பணியாற்றி வருபவர், 2014-ல் நடைபெற்ற உட்கட்சித்தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ.க. ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து கட்சிப்பணிகளில் தீவிரமாக பணியாற்றி வரும் திரு.தர்மபிரகாஷ் அவர்கள் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களிடன் கொண்டு சேர்த்து பல்வேறு உதவிகளை பெற்றுத்தந்து வருகிறார். பாரதப்பிரதமரின் சமையல் எரிவாயு, விவசாய பயிர்காப்பீடு,நிதி உதவி, உரமானியம், பயிர்கடன், பயிர் காப்பீட்டுத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அடித்தட்டு மக்களிட கொண்டு சேர்த்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு கோவை மாவட்ட இளைஞரணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2019 – டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கட்சிப்பணிகளில் தீவிரமாகப் பணியாற்றி வரும் திரு.தர்மபிரகாஷ் அவர்கள்2020-ஜூன் மாதம் கோவை தெற்கு மாவட்ட பி.ஜே.பி.செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் அரசியல் உறுப்பினர் திரு.தர்மபிரகாஷ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பில் சிறப்பாக பணியாற்றி மேலும் பல பதவிகளை பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும் ,சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.