வளரும் நட்சத்திரம் - திருச்சுழி - திரு.பிச்சைக்கனி
திரு.பிச்சைக்கனி அவர்கள் 05.05.1972-இல் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள வடக்கு நத்தம் கிராமத்தில் திரு.துரைசாமி – திருமதி.சென்னம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். மேல்நிலைப் பள்ளி கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.ரமணி என்ற மனைவியும், P.ரவீணா, P.லோகேஸ்வரி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
திரு.பிச்சைக்கனி அவர்களின் தந்தையார் திரு.துரைசாமி அவர்கள் விருதுநகர் மாவட்ட, வடக்கு நத்தம் கிராம கூட்டுறவு விவசாய சங்கத்தின் தலைவராக 1991 முதல் 1995 வரை பொறுப்பு வகித்தார். திரு.பிச்சைக்கனி அவர்கள் 2008-ஆம் ஆண்டு அ இ அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து அரசியல் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தார். அதிலிருந்து தீவிர கட்சிப்பணியாற்றி வந்தவர், படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தவர், 2013 முதல் 2019 வரை கழகத்தின் வடசென்னை, தெற்கு மாவட்ட அம்மா பேரவையின் துணைத்தலைவராக பணியாற்றினார். அப்பொழுது கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வந்துள்ள திரு.பிச்சைக்கனி, கழகத்தின் பல முன்னனி தலைவர்களுக்கு நன்கு பரிட்சையமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப்பிறகு 2019-ஆம் ஆண்டு தேசியக்கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய திரு.பிச்சைக்கனி அவர்கள் சென்னை எழும்பூர் தொகுதியில் மேற்கு மண்டல செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்
கட்சி அரசியல் தாண்டி சமுதாயப்பணியிலும் அதிக ஆர்வம் கொண்டவரான திரு.பிச்சைக்கனி அவர்கள் இராஜகம்பள (தொட்டிய நாயக்கர்) மஹாஜன சங்கத்தின் சென்னை மண்டலப்பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார். மேலும் சென்னை நகர கூட்டுறவு சங்கத்தின் துணைத்தலைவர் பதவியும் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர தொழில்துறையிலும் கால்பதித்துள்ள திரு.பிச்சைக்கனி அவர்கள் GM ரியல் எஸ்டேட் மற்றும் GM Finanace என்ற இரு நிறுவனங்களையும் நடத்திய வருகிறார். பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து சிறப்பாக பணியாற்றிவரும் திரு.பிச்சைக்கனி அவர்கள் வரும் காலங்களில் மேலும் பல பதவிகளை பெற்று, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.