🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இளம் போராளி - விருதுநகர் - திரு.G.ரவி நாயக்கர்

திரு.G.ரவி நாயக்கர் அவர்கள் 14.09.1983-இல் விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கிராமத்தில் திரு.கோபால கிருஷ்ணன்  – திருமதி.தமயேந்தி தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் G.இரவி குமார் என்பது சமுதாய ஈடுபாட்டால், G. இரவி நாயக்கர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.. இவர் மேல்நிலைக்கல்விக்குப்பின் இளங்கலை வணிகவியலில் (B.Com) சேர்ந்து கல்லூரி வாழ்வைத் துவங்கியவர், தொடரமுடியாத காரணத்தால், Gold Appraisal, A/C Mechanic ஆகிய துறைகளில் பட்டயம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.அனிதா என்ற மனைவியும் R.ஜஸ்வத் இன்ற மகனும் R.ரீத்திகா என்ற மகளும் உள்ளனர்.


திரு.ரவிகுமார் அவர்களின் தந்தையார் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் கோவில் திருப்பணிகள் மற்றும் சமுதாயப்பணிகளில் தீவிர ஈடுபாடுகொண்டவர். அவரைப்பின்பற்றி சமுதாயப்பணியில் ஆர்வம்கொண்ட  திரு.ரவி குமார், 2018 ஆம் ஆண்டு த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தில் இணைந்தவர், மாநில இளைஞரணி துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.இப்பதவியில் சிறப்பாக செயல்பட்ட திரு.இரவி நாயக்கர் அவர்கள், பண்பாட்டுக்கழகத்திற்கு  இளம் ரத்தம் பாய்ச்சினார், இதன் மூலம் தமிழக முழுவதுமுள்ள இளைஞர்களை சமுதாயத்தின் பக்கம் திருப்பினார். இதன்மூலம் ஒருசில வருடங்களிலேயே சமுதாய இளைஞர்களிடையே இனஎழுச்சியும், உத்வேகமும் ஏற்பட திரு.இரவி நாயக்கரின் பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களுக்கு சமுதாய உணர்வையும், அரசியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதால், பண்பாட்டுக் கழகத்திலிருந்து விடுவித்துக்கொண்டவர்,  2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு இராஜகம்பளத்து நாயக்கர் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பைத்துவங்கி, அதன் நிறுவனத்தலைவராகவும், இயக்க ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்தி வருகிறார். இயக்கப்பணியுடன் சுற்றுச்சூழலிலும் அதிக அக்கறையுடையவர், சீமைகருவேல மரம் ஒழிப்பு மற்றும் விவசாய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ளார். இயற்கையை பாதுகாப்பது குறித்தான இவரது சேவையைப் பாராட்டி 2019-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள “விருதை விதைகள்” என்ற அமைப்பு  இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 


தமிழ்நாடு இராஜகம்பளத்து நாயக்கர் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஆண்டு தேறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளில் மதுரையிலுள்ள மாவீரன் சிலைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். மேலும் கடந்த சில வருடங்களில் பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான  கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இளைஞரணி கூட்டம், ஊர்க்கூட்டம் மூலம் சமுதாயம் மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். மேலும் DNT சான்றிதழ் குறித்து சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வும், DNT குறித்த நாடாளுமன்றக்குழுவிடம் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களின் வாழ்க்கைச்சூழல் குறித்து எடுத்துரைத்துள்ளார். மேலும் சமுதாய மக்கள் அனைவருக்கும் DNT சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்கு, அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்துவருகிறார். இதுதவிர O.B.C இடஇதுக்கீடு பிரச்சினையிலும் அதிக ஆர்வமுள்ள திரு.இரவி நாயக்கர் அவர்கள், சமுதாய இளை ஞர்களிடையே இதுகுறித்து விழிப்புணர் ஏற்படுத்தி வருகிறார்.  

இளம் வயதிலிருந்தே சமுதாய பணியில் ஈடுப்பட்டு, பல்வேறு பணிகளில், தளங்களில் பணியாற்றி, இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும்  திரு.ரவி நாயக்கர் அவர்கள், வரும் காலங்களில் மேலும் பல சாதனைகள் புரிந்து, சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved