வளரும் நட்சத்திரம் - கோவை - திரு.S.சண்முகக்குமார்
திரு.S.சண்முகக்குமார் அவர்கள் 05.02.1984-இல் கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகேயுள்ள, மாச்சேகவுண்டன் பாளையம் கிராமத்தில் திரு.சுப்பிரமணியன் – திருமதி.ராமஜெயம் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார். உயர்நிலைப்பள்ளி கல்வி வரை பயின்றுள்ளவர், ஆட்டோ கன்சல்டிங்க் துறையில் பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணமாகி திருமதி.S.தீபிகா B.Sc., என்ற மனைவியும் S.தீக்ஷிதா, S.தியாஷினி என்ற இருமகள்களும் உள்ளனர்.
தீவிர ஆன்மீகப்பற்றாளரும், மத நம்பிக்கையாளருமான திரு.சண்முகக்குமார் அவர்கள் 2010- ஆம் ஆண்டு இந்து முன்னணியில் உறுப்பினராக இணைந்தார். இந்து முன்னனி முன்னெடுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆன்மீக சேவையாற்றியவர், 2012 ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். இதையடுத்து அக்கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியவர், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். 2018- ஆம் ஆண்டு மதுக்கரை ஒன்றிய இளைஞரணி பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழை-எளிய பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள், ரேசன் கார்டுகள், முதியோர் உதவித்தொகை போன்றவற்றை பெற்றுத்தந்து பொதுநல சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். திரு.சண்முகக்குமார் அவர்கள் தலைமையில் மாச்சேகவுண்டன் பாளையம் மாகாளியம்மன் ஒயிலாட்டக்குழுவை 01.08.2010 ஆம் ஆண்டு தொடங்கி , தங்கள் ஊரில் நடைப்பெறும் விழாக்களில் விளையாட்டுக் குழு சார்பாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
சமுதாயப்பணியிலும் தீவிர ஆர்வமுள்ள திரு.சண்முகக்குமார் அவர்கள் வருடம் தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்களில் சமுதாய இளைஞர்களை திரட்டி, ஈச்சனாரியிலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். கோவை மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் DNT சான்றிதழ் பெறுவது மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதால், அதுகுறித்து சமுதாய இளைஞர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்துவதோடு, சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பபடிவத்தை வழங்கிகொண்டுள்ளார்.
கடந்த 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், சீரப்பாளையம் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இவரின் துணைவியார் திருமதி.S.தீபீகா B.Sc., அவர்களை களமிறக்கி வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட பொழுதிலும். தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றி வரும் திரு.சண்முகக்குமார் அவர்கள், வரும்காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளையும், பதவிகளையும் பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வாழ்த்துகிறோம்.