வளரும் நட்சத்திரம் - அரவக்குறிச்சி - திரு.C.ரமேஷ்
திரு.C.ரமேஷ் அவர்கள் 09.07.2000-இல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தில் திரு.சின்னசாமி – திருமதி.ஜோதிமணி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். கணினி அறிவியல் (B.Sc) துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திரு.தானப்பிரகாஷ் என்ற சகோதரரும் உண்டு.
திரு.ரமேஷ் அவர்களின் தந்தையார் திரு.சின்னசாமி அவர்கள் அஇதிமுக அரவக்குறிச்சி ஒன்றிய இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து தற்பொழுது அரவக்குறிச்சி ஒன்றியக்குழு உறுப்பினராக பெறுப்பு வகித்துவருகிரார். தன் தந்தையார் வழியில் 2018-ஆம் ஆண்டு அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்து அரசியலில் அடியெடுத்து வைத்த திரு.ரமேஷ் அவர்கள் தீவிர கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தகவல் தொழில் நுட்பம் மூலம் சமூக வலைதளங்களில் கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதுடன், ஏழை-எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள், குடும்ப அட்டை, மானியம் போன்றவற்றை பெற்றுக்கொடுத்து வருகிறார். கட்சியில் இவரின் தீவிர ஈடுபாடு காரணமாக கட்சி தற்பொழுது அரவக்குறிச்சி மாணவரணி துணைத்தலைவராக நியமனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தவிர சமுதாயப்பணியிலும், சுயதொழிலும் ஈடுபட்டு வரும் திரு.ரமேஷ் அவர்கள், சுபகாரியங்கள், விஷேசங்களுக்கு தேவையான டேபிள், சேர், ஷாமியான போன்ற வாடகைக்கு வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், குடும்ப விவசாயமும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர சமுதாய மக்களுக்கு DNT சான்றிதழ் பெற்றுத்தருவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இளம் அரசியல்வாதியான திரு.இரமேஷ் அவர்கள், மேலும் அரசியலில் பல பதவிகளைப்பெற்று, கடந்த காலங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் அரசியலில் தவறவிட்ட வாய்ப்புகளை கைப்பற்றி, சிறந்த ஆளுமையாக உருவாகி வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டியாக திகழ்ந்திட அன்புடன் வாழ்த்துகிறோம்.