ஊராட்சி மன்ற துணைத்தலைவர் - பெருந்துறை - திரு.C.சுரேஷ்
திரு.C.சுரேஷ் அவர்கள் 01.08.1985-இல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள கருக்குபாளையம் கிராமத்தில் திரு.சென்னியப்பன் – திருமதி.ராமஆத்தாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். மேல்நிலைப்பள்ளி கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.ரம்யா என்ற மனைவியும் S.தக்ஷீதா என்ற மகளும் S.தர்னேஷ்வரன் என்ற மகனும் உள்ளனர்.
திரு.C.சுரேஷ் அவர்களின் தந்தையார் திரு.சென்னியப்பன் அவர்கள் தி.மு.க தீவிர தொண்டராக 40 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறார். இதன் அடிப்படையில் மாணவப்பருவத்திலிருந்தே திமுக-அபிமானியாக இருந்து வந்தவர் 2003-ஆம் ஆண்டுமுதல் திமுக-வின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். தி.மு.கழக நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொள்வதுடன், கட்சி அறிவிக்கும், மறியல்,ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.
அரசியல் மட்டுமல்லாது சமுதாயப்பணியிலும் ஆர்வமுடையவர், 2011 ஆம் ஆண்டு விடுதலைக்களம் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று கைதாகியுள்ளார். விடுதலைக்களம் அமைப்பின் ஈரோடு இளைஞரணி மாவட்ட தலைவராக 2008-வரை சிறப்பாக பணியாற்றினார். மேலும் வருடம் தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில், தனது சொந்த செலவில் சமுதாய மக்களை திரட்டி, திருப்பூரிலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கமாக கடைபிடித்து வருகிறார். தவிர சமுதாயத்திலுள்ள பல்வேறு அமைப்புகளுடன் நல்ல தொடர்பில் உள்ள திரு.சுரேஷ் அவர்கள், அமைப்புகள் ஏற்பாடு செய்ய்யும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.
தனது முதல் தேர்தலை 2006 ஆம் ஆண்டு சந்தித்த திரு.சுரேஷ் அவர்கள், சின்னவீரசங்கிலி ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில், அரசின் மக்கள் நலத்திட்டங்கள், இலவச உதவிகள், மானியம், குடும்ப அட்டை, சிமெண்ட் சாலை வசதி, நிழற்குடை, குடிநீர் குழாய், தெருவிளக்குகள் போன்றவற்றை வசதிகளை ஏழை-எளிய மக்களுக்குப் பெற்றுத்தந்துள்ளார். . தவிர, ஊரில் நடைப்பெறும் அனைத்து முக்கிய நிகழ்விலும் மக்களின் சுக, துக்கங்களிலும் கலந்து கொள்பவர்.
மீண்டும் கடந்த 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தற்பொழுது சின்னவீரசங்கிலி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது கொரானோவால் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு நிவாரண பொருள்கள் அரிசி, பருப்பு, காய்கறி போன்றவற்றை வழங்கிவருகிறார்.திரு.சுரேஷ் அவர்கள், வரும்காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளையும், பதவிகளையும் பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வாழ்த்துகிறோம்.