🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் பிரபலங்கள் - அரவக்குறிச்சி - திரு.பழனிச்சாமி

திரு.பழனிச்சாமி அவர்கள் 07.09.1965-இல் கரூர்  மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள தடாகோவில் கிராமத்தில் திரு.கந்தசாமி  – திருமதி.சின்னம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில்  மகனாகப்பிறந்தார். தொடக்கக் கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.பகவதி என்ற மனைவியும், P.கோபிநாத் B.E., M.B.A., மற்றும் P.ஜெகன் B.E., என்ற இருமகன்களும் P.சுபாசினி M.A., என்ற மகளும் உள்ளனர்.


சிறு வயதிலிருந்தே எம்.ஜி.ஆர் ரசிகராக வளர்ந்த திரு.பழனிச்சாமி அவர்கள், அவர் மறையும் வரை அதிமுக ஆதரவாளராக இருந்து வந்தார். அதன் பின் திமுக-வில் இணைந்தவர், 1990 முதல் தடாகோவில் கிளைக்கழக செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டவர், 2010-ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். அதேகாலகட்டத்தில் மாவட்டக்கழக பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு 2010 வரை பதவி வகித்தார்.  மீண்டும் 2015-ஆம் ஆண்டு ஊராட்சிக்கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றுவரை  அப்பதவியில் தொடர்ந்து வருகிறார். கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் தி.மு.கழக நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொள்வதுடன், கட்சி அறிவிக்கும், மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு பலமுறை கைதாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், குடும்ப விவசாயம் தவிர L.I.C முகவராகவும் உள்ள திரு.பழனிச்சாமி அவர்கள், கரூர் மாவட்ட முகவர்கள் சேர்மனாக இரண்டாண்டுகள் பதவி வகித்துள்ளார். தற்பொழுது ஜோனல் கிளப் மெம்பராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு பைனான்ஸ் தொழிலும் ஈடுபட்டு வரும் திரு.பழனிசாமி அவர்கள் அரவக்குறிச்சி, கரூர் ஆகிய இடங்களில் செல்வக்குமார் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பங்குதார்ராக உள்ளவர், மேட்டுப்பாளையம், சென்னை ஆகிய இடங்களிலும் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தல் மூலம் முதல் தேர்தல்களத்தை சந்தித்தவர், தடாகோவில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தேல்வி அடைந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.கழக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்தபோதிலும், சோர்வடையாமல் மீண்டும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுகழக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுக மிகவும் வலுவாக விளங்கும் பகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி பகுதியில், கடந்த 2019 டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 

சுமார் 40 ஆண்டுகால அரசியல் வாழ்விற்கு சொந்தக்காரரான திரு.பழனிச்சாமி அவர்கள், அரசியல் உட்பட பல்வேறு துறைகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகிறார். அரசியலில் அடுத்தடுத்த சறுக்கள்களை சந்தித்தபொழுதிலும் எளிதில் துவண்டுவிடாத மனவலிமை பெற்றவர், வரும்காலங்களில் அரசியலில் மிகப்பெரிய வெற்றிகளையும், பதவிகளையும் பெற்று, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved