🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வளரும் நட்சத்திரம் - மீனாட்சிபுரம் - திரு.C.நேதாஜி கார்த்திகேயன்

திரு.C.நேதாஜி கார்த்திகேயன் அவர்கள் 10.07.1994-ல் மதுரை மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தில் திருT.N.சந்திரபோஸ் - திருமதி. ராஜாமணி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாக பிறந்தார். மதுரையிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் நிர்வாக (B.B.A) துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார், ஆந்திர பிரதேசத்திலுள்ள வீரவள்ளி கல்லூரியில் சட்ட (L.L.B) பயின்றுள்ளார்.


மதிமுக மறுமலர்ச்சி மாணவர் அமைப்பில் இணைந்து பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தார். அதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இளம் காளைகள் கட்சி என்ற இயக்கத்தை தொடங்கி அதன் நிறுவன தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அக்கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளவர், உலக அளவில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட்த்தில் முக்கிய பங்காற்றியுள்ளார் திரு.நேதாஜி கார்த்திகேயன். மேலும் மதுரை அடையாளமாக விளங்கும் புகழ்பெற்ற தமுக்கம் மைதானம் வணிகரீதியாக மாற்றப்படுவதை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியுள்ள திரு.நேதாஜி, நீதிமன்றத்தை நாடி தடையாணை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.C.நேதாஜி கார்த்திகேயன் அவர்கள் அரசியலில் பணியில் மட்டுமல்லாது சமுதாய பணியிலும் ஆர்வம் கொண்டவர், மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்களில் சமுதாய மக்களை ஒன்று திரட்டி கொண்டு மதுரையிலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் சமுதாய அமைப்புகளுடன்  நல்ல நட்புடன் தொடர்பிலுள்ளார்.


தந்தையார் திரு. T.N.சந்திரபோஸ் அவர்களுடன் இணைந்து மதுரையில் RK பைனான்ஸ் நடத்திவருவதுடன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் ஆகவும் பயிற்சிபெற்று வருகிறார். மேலும் வாடிவாசல் என்ற டிவி சேனலை தொடங்கும் ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வரும் திரு.நேதாஜி அவர்கள், ஒருசில மாதங்களில் அப்பணியை நிறைவு செய்து ஒளிபரப்பு செய்யும் முனைப்பில் உள்ளார்.

இதுவரை தேர்தலில் எந்த பதவிக்கு போட்டியிடவில்லை என்றபொழுதிலும், சாதி, மதம் பாராமல் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார். அரசியலிலும், சமுதாயத்திலும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் திரு.C.நேதாஜி கார்த்திகேயன் அவர்கள் வருங்காலத்தில் சிறப்பான பதவிகளைப் பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved