🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் - சத்தியமங்கலம் - திரு.D.பிரபு

திரு.D.பிரபு அவர்கள் 31.10.1989-இல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி திரு.தனராஜ் – திருமதி.சரோஜா தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவர் கோவையிலுள்ள Dr.N.G.P கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.C.A பட்டமும், பெங்களூரில் டாக்டர்.அம்போத்கர் கல்லூரியில்  M.B.A., L.L.B பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.P.சூர்யா என்ற மனைவியும் P.சருண் என்ற மகனும் உள்ளனர்.


திரு.பிரபு அவர்கள் கல்லூரி படிப்பை முடித்தபின் பெங்களூரிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் H.R-மேனேஜராக மூன்றாண்டுகள் பணியாற்றியுள்ளார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட திரு.பிரபு அவர்கள், மென்பொருள் நிறுவனத்தில் வகித்து வந்த பதவியைத்துறந்து 2016-ல் சொந்த ஊர் திரும்பியவர், சொந்த நிலத்தில் இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்து, பெங்களூரில் மத்திய அரசு நடத்தி வரும் Safal Market நிறுவனத்திற்கு சப்ளை செய்து வருகின்றார்.  

திரு.பிரபு அவர்களின் தந்தையார் தி.மு.க அனுதாபியாக இருந்த காரணத்தால், தனக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டபொழுது தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு திமுக-வில் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது சிறப்பான செயல்பாட்டால் 2019-இல் மாவட்ட அளவிலான பொறுப்பிற்கு முன்னேறியவர், ஈரோடு வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணைஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார். இதுதவிர தி.மு.க சார்பில் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்கள், மறியல் போன்றவற்றில் தவறாமல் கலந்து கொண்டுவருகிறார்.


அரசியல் பணியில் மட்டுமல்லாது சமுதாய பணியிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட திரு.பிரபு அவர்கள் வருடம் தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாளில் மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். 

தேர்தல் களத்தை சந்தித்து இதுவரை எந்த பதவிக்கும் போட்டியிடாதவர்,  தன்னைநாடி வரும் மக்களுக்கு தன்னால இயன்ற உதவிகளை செய்து வரும் திரு.பிரபு அவர்கள், கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் இழந்து வாடிய எழை-ஏளிய மக்களுக்கு உணவு, அரிசி, காய்கறி போன்றவற்றை மானியமாக வழங்கியுள்ளார். அரசியல், சமுதாயம் என தொடர்ந்து சிறப்பாக இயங்கிவரும் திரு.பிரபு அவர்கள், வரும் காலங்களில் சிறப்பான பதவிகளைப்பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved