🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாளைய நம்பிக்கை நட்சத்திரம் - பவானி - திரு.M.ஜெகநாதன்

திரு.M.ஜெகநாதன் அவர்கள் 02.11.1983-இல் ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள ஒரிச்சேரிபுதூர் கிராமத்தில் திரு.மாரசாமி – திருமதி.பொம்மியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளங்கலை  வர்த்தக மேலாண்மை (B.B.A) பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.J.கோமதி என்ற மனைவியும் J.சாகித்யன் என்ற மகனும் உள்ளனர்.


டாக்டர்.கலைஞர் அவர்களின் செயல்திட்டங்களால் ஈர்க்கப்பட்ட திரு. M.ஜெகநாதன்  அவர்கள் 2000 ஆம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தவர், கிளைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு பவானி ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொள்வதுடன், கட்சி அறிவிக்கும், மறியல்,ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.  

அரசியல் மட்டுமல்லாது சமுதாயப்பணியிலும் ஆர்வமுடையவர் வருடம் தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளை சிறப்பாக ஏற்பாடு செய்து கொண்டாடுவதுடன், மாவீரன் நினைவுநாளில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

 

இதுவரை தேர்தலில் எந்த பதவிக்கு போட்டியிடவில்லை என்றபொழுதிலும், சாதி, மதம் பாராமல் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார். கொரோனா  பொதுமுடக்கத்தின் காரணமாக  வாழ்வாதரங்களை இழந்துவாடிய ஏழை-எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை செய்துள்ளார். சமுதாயத்தில் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரான திரு. M.ஜெகநாதன் அவர்கள் பொதுவாழ்வில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி சிறப்பான பதவிகளைப் பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved