🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாஞ்சையில் சித்திரை திருவிழா! அழைக்கிறாள் அன்னை சக்கதேவி!

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக நாடுமுழுவதும் கொண்டாடப்படும் திருவிழாக்கள் தடைபட்டு வந்தன. தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டதின் எதிரொலியாக வடமாநிலங்களில் ஹோலி, இராமநவமி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் கடந்த இருதினங்களுக்கு முன் மதுரையில் உலகப்பிரசிதி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். 

அதேபோல் தமிழகம் முழுவதும் கிராமக்கோயில் திருவிழாக்கள் இரண்டாண்டு இடைவெளிக்குப்பின் கடந்த ஒருசில மாதங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. கம்பளத்தார்கள் கட்டுப்பாட்டில் உள்ள பலகோயில்களில் திருவிழாக்களும், கும்பாபிசேகங்களும் நடந்தவண்ணமே உள்ளன. கடும் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலைக்கு மத்தியிலும் திருவிழாக்களை மக்கள் படு உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் மாவீரன் கட்டபொம்மனின் குலதொய்வமாக வீரசக்கதேவி ஆலயத்தில் சித்திரைத் திருவிழா இந்தாண்டு படு விமர்சையாக கொண்டாட பாஞ்சாலங்குறிச்சி தயாராகி வருகிறது. அடுத்த மாதம் (மே மாதம்) 13-ஆம் தேதி காலை 6 மணிக்கு  கணபதி ஹோமத்துடன் காலை 9 மணிக்கு கோடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்படவுள்ளது. அதனையடுத்து அன்றும் அடுத்தநாளும் (14-ஆம் தேதி)  நாடகங்கள், பட்டிமன்றம், இசைக்கச்சேரி, தேவராட்டம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவின் இறுதியாக 15-ஆம் தேதி காலை 6 மணிக்கு மாட்டு வண்டிப்பந்தயத்துடன் விழா நிறைவு பெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர். விழாவிற்கு செல்லவுள்ள சமுதாய பக்தகோடிகள் வாகனங்களில் பாதுகாப்பாகவும், முழு பக்தியோடும், ஈடுபாட்டோடும், மது குடிப்பதையும், கலவர சூழல் உருவாவதையும் முற்றிலும் தவிர்த்து கண்ணியத்தோடு குடும்பத்தினரோடு சென்று சக்கதேவியை தரிசித்து அருள்பெற்று வர தொட்டிய நாயக்கர்.காம் வாழ்த்துகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved