🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நீராவிகரிசல்குளம் வந்துபாருங்க! கம்பளத்து காளைகளின் ஆட்டம்தானுங்க!

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், நீராவிகரிசல்குளம் கிராமத்தில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீமுத்தாலம்மன் மற்றும் இராஜகம்பளத்தார் சமுதாயத்திற்கு தனித்து பாத்தியப்பட்ட ஸ்ரீ ஒக்கரையா (எ) ஸ்ரீ கிழவப்பசாமி திருக்கோவில் "ஆனி பொங்கல் திருவிழா" கடந்த 27.06.2022-திங்கள்கிழமை, காலை 9 மணிக்கு திருக்காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றுதலோடு தொடங்கியது.


26.06.2022 மாலை ஸ்ரீ முத்தாலம்மனுக்கு விஷேச பூஜையில் ஆரம்பித்த விழா நிகழ்ச்சி, கடந்த 6-ஆம் தேதியில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற இந்த விழாவை ஒட்டி கமுதி வட்டாரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தீர்த்தகலசம், விஷேச பூஜைகள், ஆடல்பாடல்கள், நாடக நிகழ்ச்சிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று இரவு பூப்பெட்டி எடுத்தல் மற்றும் பூஜைகள் நடைபெறவுள்ளது.


நாளையும் தொடரும் திருவிழா நிகழ்ச்சிகளில் பொங்கல் வைக்கும் வைபவமும், கிடாய் விருந்தும் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து இரவு வள்ளி கல்யாணம் நாடகம் நடைபெறவுள்ளது.


இறுதிநாளான 10-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவோடு திருவிழா நிறைவு பெறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலைநிமித்தமாக இடம் பெயர்ந்த நிராவிகரிசல்குளத்தைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு சென்று விழாவில் கலந்துகொண்டுள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved