🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விநாயகர் சதுர்த்தி பிரதமர், மு.முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள் என்பதால் விநாயகர் சிலை விநியோகம் கடந்த இரண்டு நாட்களாக ஜோராக நடைபெற்று வருகிறது. 

அதேபோல் நாடு முழுவதும் உள்ள இந்து சமய ஆலயங்களிலும், விநாயகர் ஆலங்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கும். இதனால் பிள்ளையார்பட்டி போன்ற பிரசித்திபெற்ற ஆலயங்களில் நள்ளிரவில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதுதவிர ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் பெரிய அளவிலான சிலைகள் பொதுஇடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்வது வழக்கம்போல் நடைபெற்று வருகிறது . 

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "விநாயகர் சதுர்த்தி திருநாளில் கருணை மற்றும் சகோதரத்துவம் எப்போதும் மேலோங்கட்டும். ஞானம் என்பது முக்தியை விரும்புபவருக்கு அறியாமையை அழிப்பதாகும். செல்வம் பக்தனுக்குத் திருப்தி அளிக்கிறது. யாரிடமிருந்து தடைகள் அழிகிறதோ, யாரிடமிருந்து காரியம் நிறைவேறுகிறதோ, அந்த விநாயகரை எப்போதும் கும்பிட்டு வணங்குகிறோம். விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகப் பெருமானின் அருள் எப்போதும் நம் மீது இருக்கட்டும்." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்" என்ற வாக்கிற்கு இணங்க மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, வாழ்வில் நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்ந்திட எனது விநாயகர்சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இராஜகம்பளத்தார் சமுதாய உறவுகள் அனைவருக்கும் ,விநாயகப் பெருமான் உங்கள் கவலைகள், துக்கங்கள் மற்றும் பதட்டங்கள் அனைத்தையும் அழித்து, உங்கள் வாழ்க்கையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும். இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved