🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வரிசை கட்டிய கம்பளத்தார் இல்ல திருமணங்கள் - திணறிப்போன தலைவர்கள் - ஓடி ஓடி நேரில் வாழ்த்து!

ஆடி மாதம் முடிந்து கடந்த வெள்ளிக்கிழமை (18.08.2023) முதல் ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில், மாதத் தொடக்கத்திலிருந்தே கல்யாண சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களும், இரயில்களும் நிரம்பி வழிவது ஒருபுறமென்றால் மற்றொருபுறம் திருமணத்திற்குச் செல்லும் வாகனங்கள் சாலையில் அணிவகுக்கின்றன. 

எந்தத் திருமணத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற அக்கறையில், கை நிறைய திருமண அழைப்பிதழ்களை அள்ளிக்கொண்டு, வாட்ஸப் வழியாக வந்த அழைப்பிதழ்களையும் நினைவில் வைத்துக்கொண்டு கூகிள் மேப்பில் பாதையைத் தேடியபடி செல்லும் ஒவ்வொருவர் மனதிலும், எங்கு கைப்பேசியில் சார்ஜ் இறங்கிவிடுவோமோ என்ற அச்சம் அவ்வப்போது. போக்குவரத்து நெரிசல்களில் மூச்சு முட்டி ஒருவழியாக சமாளித்து திருமண மண்டபத்தை அடைந்துவிட்டால், பெரும்பாலான மண்டபங்களில் ஹவுஸ்புல் போர்டுகள். பார்க்கிங் செய்ய இடம்கிடைத்து அன்றைய தின அதிஷ்டசாலிகள் நம்மைத்தவிர வேறு யார் இருக்கப் போகிறார்கள். 

ஒருவழியாக மண்டபத்திற்குள் நுழைந்து விட்டால் மணமக்களுக்கு வாழ்த்துச்சொல்ல நிற்கும் வரிசையைப் பார்த்தால், சப்பிட்டுவிட்டு வரலாமா இல்லை மணமக்களை பார்த்து அன்பளிப்பை வழங்கி வாழ்த்தியபிறகு சாப்பிடலாமா? என்ற குழப்பம் வராதவர்கள் குறைவு. அங்கு மட்டும் என்ன வாழ்கிறது?, பஃபே சிஸ்டம் என்றால் விரைவாக உணவு கிடைக்கும் ஆனால் உட்கார முடியாது. உட்கார நினைத்தால் இலைபோடுவதற்கு முன்பே பின்பக்கம் பூனைப்படைகள் போல் அடுத்த பந்திக்கு இடம்பிடிக்க வரிசையில் நின்று இலையையே பார்த்தபடி இருக்கும். இப்படித்தான் ஒவ்வொரு திருமணமும் என்றாகிப்போன நிலையில் உறவுகளை பார்த்தும் பார்க்காமலும், பேசியும் பேசாமலும் அவதி அவதியாக புறப்பட வேண்டியுள்ளது.

ஒவ்வொருவருக்கும் இந்த பிரச்சினை உள்ளது என்றால் கொஞ்சம் கூடுதல் பிரச்சினை தலைவர்களுக்கு. மிக முக்கியமான, அவசியம் கலந்துகொள்ள வேண்டிய திருமணம் வெளியூரில் இருந்துவிட்டால் போதும், உள்ளூர் திருமணங்கள் அனைத்திற்கும் செல்லமுடியாமல் போய்விடுகிறது. அதற்கடுத்தடுத்து வரும் சங்கடங்கள் பல. இப்படித்தான் திருமண நிகழ்வில் பார்க்கும்போதும் சொல்லும் பொதுவான புலம்பல்கள். இந்த நெருக்கடிக்கு மத்தியில்,


நேற்று முன்தினம் திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.இராமகிருஷ்ணன் இல்ல திருமணவிழாவில் அந்த அமைப்பின் அவைத்தலைவர் பி.எஸ்.மணி, பொருளாளர் பாண்டியன், இளைஞரணி செயலாளர் பூப்பாண்டி. வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, மூத்தவழக்கறிஞர் நாமக்கல் பழனிச்சாமி, சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜ், கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சிவக்குமார், வழக்கறிஞர் முருகராஜ்,  நாகராஜ், விருதுநகர் மகேஷ், வைகுந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 


சென்னை முகப்பேரில் நேற்று (20.08.2023) மாலை நடைபெற்ற சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டல பொறுப்பாளர் திரு.ஆண்டிமுருகன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜ், துணைத்தலைவர் நாராயணசாமி, துணைச்செயலாளர் ரவுண்ட் பில்டிங் முருகன், மண்டல பொறுப்பாளர்கள் குருசாமி, செல்வராஜ், எஸ்.எஸ்.செல்வராஜ், முகப்பேர் ராஜா, நடராஜன், தூத்துக்குடி தொழிலதிபர் லட்சுமணன், திரைப்பட நடிகர் சின்னசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


பொள்ளாச்சி தாம்சன் ஆடிட்டோரியத்தில் இன்று (21.08.2023) காலை நடைபெற்ற இராமபட்டிணம் சின்ன அரண்மனையார் இல்ல திருமண விழாவில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன், செயலாளர் வெங்கடேஷ்குமார், இளைஞரணி செயலாளர் குணசேகர், இராமபட்டிணம் இராஜமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதுபோல் என்னற்ற திருமணங்கள் நேற்று முன்தினத்திலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அங்குமிங்கும் செல்லமுடியாமல் மக்களோடு மக்களாக பொதுவாழ்வில் உள்ளவர்களும் ஓடி ஓடி மணமக்களை வாழ்த்திக்கொண்டுள்ளனர். 

இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மணமக்களுக்கும் தொட்டியநாயக்கர்.காம் இணையதளம் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved