🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அமைச்சரின் தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித்தருமாறு முதல்வரின் மகனிடம் கோரிக்கை!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 213/4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தேனி வருகைந்ததார். நேற்று (25.10.2023) நடைபெற்ற இந்த விழாவை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் அமைக்கப்பட்ட சிறுதானிய உணவகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் மாவட்டத்தின் அரசு திட்டங்களின் செயல்பாடுகள், புதிய திட்டப்பணிகள் செயல்படுத்துவது உள்பட பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். அதன்பிறகு, தேனி என்.ஆர்.டி. நகரில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை அவர் திறந்து வைத்தார்.

முன்னதாக, தேனி வந்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை திருமதி.தவமணி அம்மாள் தலைமையிலான டிஎன்டி சமுதாய பிரதிநிதிகள் சந்தித்து,  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபின வகுப்பினருக்கு டிஎன்டி என ஒற்றைச்சான்றிதழ் வழங்க மறுப்பதை சுட்டிக்காட்டி, அன்றைய எதிர்க்கட்சித்தலைவரும், இன்றைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்,  திமுக ஆட்சி அமைந்தவுடன் ஒற்றை சாதிச்சான்றிதழ்  வழங்கப்படும் என்று 2021 ஆலங்குளம் தொகுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய வீடியோவை ஒளிபரப்பிக்காட்டி, இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவைப்பெற்றுக்கொண்டு, கோரிக்கையை பொறுமையாகக் கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின், இப்பிரச்சினையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முதல்வருடனான இந்த சந்திப்பின்போது, தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பில் போடி சௌந்திரபாண்டியன், தேனி அன்பழகன், மதுரை இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved