🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மஹாகும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள ஊர் நாயக்கர் அழைப்பு!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், பரளி கிராமம், நல்லையம்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீபகவதி அம்மன், ஸ்ரீ பட்டாலம்மன், ஸ்ரீ வீரகாரன், ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயங்களுக்கு ஆலய புனராவர்தன, ஜீரனோதரன, அஷ்டபந்தன மஹாகும்பாபிசேக விழா நாளை (27.10.2023) வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்குமேல் 10.15 மணிக்குள் நடைபெறவுள்ளது.

அம்மையப்பன் ஸ்தபதியார் சிற்பவேலைப்பாடுடன் அமையப்பெற்ற இக்கோவில் கும்பாபிஷேக விழா தவில் வித்வான் கே.சிவசாமி குழுவினரின் மங்கல இசையோடு தொடங்குகிறது. கனேஷ் ஐயர் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேக ஸர்வ ஸாதகம் செய்துவைக்கின்றனர்.

இன்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் செய்துவைக்கப்பட்டு, கிராம மக்கள் மோகனூர் சென்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த கலசங்கள் கொண்டுவரப்பட்டு கணபதி வழிபாட்டுடன் முதற்கால யாகபூஜை தொடங்குகிறது. அதன்பிறகு 9 மணியளவில் மஹா பூர்ணஹாதி பிரசாதம் வழங்கப்படுவதுடன் இன்றைய நிகழ்ச்சி முடிவடைகிறது.



மீண்டும் நாளை காலை 6 மணியளவில் இரண்டாம் கால பூஜை தொடங்கி 9.45 மணியளவில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறவுள்ளது.


மஹாகும்பாபிஷேகத்தை அடுத்து நல்லையம்பட்டி கிராமம் மற்றும் சுற்றுகிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்நாயக்கர் தலைமையில் விழாக்குழுவினரோடு சேர்ந்து கிராம மக்கள் செய்துவருகின்றனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved