இனிய இல்லற வாழ்வில் இணையும் இளந்தளிர்களுக்கு வாழ்த்துகள்!

இன்று ஐப்பசித் திங்கள் 29-ஆம் நாள் (15.11.2023), புதன்கிழமை மாலை நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஆன்றோர், சான்றோர் பெருமக்கள் நல்வாழ்த்துக்களோடு தொடங்கி, வியாழன் (16.11.2023) காலை மங்கலநாண் அணிந்து இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இராஜகம்பளத்து இளந்தளிர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட அன்புடன் வாழ்த்துகிறோம்.
திருப்பூர் மாவட்டம், மண்ணரை, பாரப்பாளையம், சின்னப்ப நாயக்கர் தோட்டம் திரு.ஆர்.ரங்கசாமி-திருமதி.ஆர்.விஜயலட்சுமி ஆகியோரின் அன்புமகனும் MD Tex உரிமையாளருமான செல்வன் ஆர்.விஜய் ஆனந்த்-க்கும், ஈரோடு மாவட்டம், சத்தி வட்டம், கொண்டமுத்தனூர் திரு.எஸ்.இராமசாமி - ஆர்.பூங்கொடி ஆகியோரின் அன்புமகள் ஆர்.கீர்த்தனா ஆகியோரின் திருமண வரவேற்பு திருப்பூர், கவுண்டம்பாளையம் நால்ரோடு அருகேயுள்ள V.S.G திருமண மஹாலில் இன்று (15.11.2023) மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெறவுள்ளது.
அதேபோல், கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் இராமபட்டணம் ஆர்.வாசுகிருஷ்ணமூர்த்தி - திருமதி.வி.வள்ளியம்மாள் ஆகியோரின் அன்புச்செல்வன் வி.சரவணக்குமார் B.E.,-க்கும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், காவலப்பட்டி பட்டக்காரரும், திருப்பூர் திருப்பதி பைனான்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா பிரிண்டர்ஸ் உரிமையாளருமான திரு.ஏ.செல்வராஜ் - திருமதி.தெய்வசிகாமணி ஆகியோரின் அன்புமகள் எஸ்.பவித்ரா (எ) ஹேமா B.Com., M.B.A., ஆகியோரது திருமண வரவேற்பு இன்று (15.11.2023) மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை பொள்ளாச்சி-உடுமலை சாலையில் அமைந்துள்ள தங்கசரஸ் திருமண மண்டபத்தில் இராமபட்டிணம் ஜமீன்தார் உயர்திரு.விஷ்னுகாந்த சக்திவேல் ராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், தெற்கு மாவட்ட தலைவர் குணசேகர், மாவட்ட செயலாளர் எஸ்.வெங்கடேஷ்குமார், இளைஞரணி செயலாளர் க.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.