கொங்கு நாட்டு தங்கமே! சேலத்துச் சிங்கமே! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தாய்த் தமிழகத்தில், கொஞ்சு தமிழ் பேசும் கொங்கு மண்டலத்தில், தித்திக்கும் மாங்கனி மாநகரின் அருகே அமைந்துள்ள சிலுவம்பாளையத்தில் சிலிர்த்தெழுந்த சிங்கத் தலைவா, உழைப்பவர்களின் மேன்மையைப் போற்றும் மே திங்கள் 12 ஆம் நாளான இப்பொன் நாளில் பிறந்தநாள் காணும் 'எடப்பாடியார்' என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் பாசத் தலைவர், மாண்புமிகு எடப்பாடி K.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பொன்மனச் செம்மல், இதய தெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களால் ஆரவாரமாகத் துவங்கப்பட்டு தொடர் வெற்றிகளால் தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்து, புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் காலத்தில், இந்திய பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்த மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கிளைச் செயலாளராக பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்து, மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்புச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் என அரசியல் படிநிலைப் பரிணாமங்களிலும் தன் அயராத உழைப்பினாலும், திறமையாலும், முத்திரை பதித்து வானுயர உயர்ந்தோங்கி நிற்கும் உன்னத தலைவா!.
தாயின்றி தவித்தது கழகம் மட்டுமல்ல, பத்து மாதம் கூட தாண்டிடாத ஆட்சியெனும் சிசுவும் தான். கருவிலே கலைந்திருந்தால் கவலைகொள்வோர் கொஞ்சம் தான். ஆனால் சிசுவைக் கொன்றுதீர்க்க நவீனகால கம்சன்கள் நாட்குறித்தர். ஆனால் நீவீர் எதற்கும் மசியாத கலியுக கிருஷ்ணனாக கட்சியையும், ஆட்சியையும் காத்து நின்றீர்.காப்பதே கடவுள் என்றால், கட்சியையும், ஆட்சியையும் மட்டுமல்ல, ஒன்னரைக்கோடி தொண்டர்களின் கனவுகளையும் காத்தவரை என் சொல்வோன்!.
வெற்றி வீரரே, தானைத் தலைவர் எம்ஜிஆர், பாசத் தாய் அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு அடுத்து கழக ஆட்சித்தேரை அதிக காலம் ஓட்டிச் சென்ற புரட்சி தலைமகனே, "உழைப்போரே உயர்ந்தோர்" என்பதை உலகிற்கு உணர்த்திய உத்தமரே. நடந்து முடிந்த கழக தேர்தலில் ஒன்றரைக்கோடி தொண்டர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று "இணை ஒருங்கிணைப்பாளர்" என்ற உயர்ந்த தலைமைப் பொறுப்பேற்று கழகத்தை வழிநடத்திக் கொண்டு இருக்கக்கூடிய முன்னாள் முதல்வர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர், நாளைய முதல்வர் பாசமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளிள் வாழ்த்தி வணங்குகிறேன்.
என்றும் எடப்பாடியார் வழியில்,
அ. காசிராஜ் M.A.,
விருதுநகர் (கி )மாவட்ட துணைச் செயலாளர், இலக்கிய அணி.