கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருகிணைப்பாளரும், சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழாவிற்காக அரும்பங்காற்றிய பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் கே.டி.மோகன்ராஜ் அவர்களின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் வாழ்த்துக்கூறியுள்ளனர். அதன் விபரம் வருமாறு,
கோவை மாவட்டத்தில் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் உருவாகிட உறுதுணையாக இருந்ததோடு, அடுத்த சில மாதங்களுக்குள் நடைபெற்ற முப்பெரும் விழா வெற்றிபெற பெருமளவில் உதவிகரமாக இருந்த கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் அவர்கள் நீடுடி வாழ்ந்து சமுதாயத்திற்கு பணியாற்றிட வாழ்த்துவதாக இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.
வன்னியர் இடஒதுக்கீடு வழக்கை உச்சநீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்காக நிதி திரட்டி கொடுத்ததிலும், டின்டி சாதி சான்றிதழ் கேட்டு நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்ததோடு, 1990-களில் கோவை மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு கண்டவருமான ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் தொடர்ந்து சமுதாயத்திற்கு உழைத்திட இறைவன் நீண்ட ஆயுளை வழங்குமாறு அவரின் பிறந்தநாளான இன்று பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், கால்நூற்றாண்டுகாலமாக கோவை மாவட்டத்தில் சமுதாயப்பணியாற்றி, ஈச்சனாரியில் மாவீரன் கட்டபொம்மன் சிலையமைப்பதில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு வெற்றிகரமாக்கிய சகோதரர் மோகன்ராஜ் இன்னும் பல பிறைகள் காண வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல், திமுக பிரமுகர் ஈச்சனாரி மகாலிங்கம், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவுல்ராஜ், தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ்குமார், வடக்கு மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் மனோகரன், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலரும் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறியுள்ளனர்.