🔴 LIVE | முப்பெரும் விழா 2023


70-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு வாழ்த்துகள்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி க. பழனிசாமி அவர்களின் 70-வது பிறந்தநாள் இன்று (12-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

சேலம் அருகே சொந்த ஊரான எடப்பாடிக்கு புறப்பட்டுச்செல்லும் முன்பாக  கடந்த 10-ஆம் தேதியன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள்,  மு.அமைச்சர்கள்,  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் சந்தித்து எடப்பாடியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தனது 70-வது பிறந்தநாளையொட்டி தன்னை யாரும் நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று கட்சியினரைக் கேட்டுக்கொண்ட எடப்பாடியார், இந்த ஆண்டு  வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குமாறு கட்சியினரிடம் வேண்டுகோள் விடுத்தார். 

இதனையடுத்து அந்தந்த பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும்,  கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்யவும், பொதுமக்களுக்கு அன்னதானம், காலை சிற்றுண்டி, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, நோட்டு புத்தகம் வழங்குதல், முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களை பாராட்டி கவுரவித்தல், குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்குதல், ஏழை, எளியோருக்கு பிரியாணி வழங்குதல் நிகழ்ச்சிக்கும் அதிமுக வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் விருதுநகர் நகர கழக செயலாளர் தலைமையில் விருதுநகர் நகர்மன்ற உறுப்பினரும் , நகர மீனவர் அணி செயலாளருமான R.S.சரவணன் உள்ளிட்ட கழக முன்னனியினர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தேசபந்து மைதானத்தில் நீர், மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர்.

குடிமராமத்துப்பணி, அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு  7.5% இட ஒதுக்கீடு போன்ற சிறப்புமிக்க திட்டங்களை தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றி வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த தங்கள் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அவர்களின் 70 வது பிறந்த நாளையொட்டி, கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக  தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரோடு சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் எடப்பாடியாருக்கு தங்களது வாழ்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர். 


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved