🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சுதந்திர சிந்தனையாளர் க.சுப்பு அவர்களின் 84-வது பிறந்தநாள்!

மே 10, தமிழகத்தில் ‘சட்டமன்ற கதாநாயகன்’ என்று சிலாகிக்கப்பட்ட க.சுப்பு அவர்களின் பிறந்தநாள் இன்று. மதுரை திருமங்கலத்தையடுத்த பிள்ளையார் நத்தத்தில் 1941-ல் பிறந்தவர் க.சுப்பு. கல்லூரி நாட்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தலைசிறந்த சொற்பொழிவாளராக விருது பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டராக தன் அரசியல் வாழ்வை துவக்கி, ராஜபாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு கூட்டங்களில் பேச்சாளராக பங்கேற்றார். தொழிற்சங்க தலைவராக போறுப்பு வகித்து வந்த க.சுப்பு, 1971ம் ஆண்டு ராஜபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

பின் திமுக வில் இணைந்த க.சுப்பு வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 1978-ல் அதிமுகவில் சேர்ந்து எம்.எல்.சி. ஆனார். எம்.ஜி.ஆர். மறைந்ததும், காங்கிரஸ், த.மா.கா. ஆகிய கட்சிகளில் இருந்துவிட்டு, 2001-ல் மீண்டும் அதிமுகவுக்கு வந்தார். 2007-ல் சட்டமன்றத்தில் கலைஞருக்கு பொன்விழா கொண்டாடிய நேரத்தில், ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு மாறாக ‘பொன்விழா கொண்டாட்டமெல்லாம் சரியானதுதான்..’ என்று வெளிப்படையாகப் பேசியதால், அக்கட்சியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். பிறகு, மீண்டும் திமுகவில் சேர்ந்தார்.  “சுதந்திரமாக சிந்தித்து செயல்படுபவர் என்பதால்,  எந்தக் கட்சியிலும் அவரால் நிலைத்திருக்க முடியவில்லை.” என்பார்கள், அவரது சகாக்களே!. ”பகைவரையும் வசீகரிக்கக்கூடிய பேச்சாற்றலும், வாதத்திறமையும் கொண்டவர் சுப்பு..” என்று அவரது மறைவின்போது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கலைஞர்.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் மீண்டும் கோட்டை அமையவும், தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு அரசின் பல சலுகைகளைப் பெறவும் காரணமாக இருந்தவர் க.சுப்பு. 91-96 ஆட்சிகாலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்ட பலவேறு முடிவுகளை விமர்சித்து, ஜெயல்லிதாவுக்கு எதிராக  நக்கீரன் இதழில் ‘இங்கே ஒரு ஹிட்லர்’ என்ற பரபரப்புத் தொடரை எழுதிய க.சுப்பு, ‘நக்கீரன்’ என்ற தலைப்பினை பெருந்தன்மையுடன் கோபால் அவர்களுக்கு அளித்தவரும்கூட.  அவரது புகழ் நீடுவாழ்க!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved