த.வீ.ப.க.மாநில தலைவர் பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து!
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் மாநில தலைவரும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான திரு.ஆர்.வரதராஜன் அவர்களின் பிறந்தநாளையொட்டி சமுதாய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தொட்டிய நாயக்கர்.காம் இணையதளத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ள ஈரோடு மாவட்ட முன்னாள் தலைவரும், அம்மா பேரவை ஒன்றியச் செயலாளருமான சத்தியமங்கலம் என்.பவுல்ராஜ் அவர்கள், கம்பளத்தாரின் அடையாளமாக விளங்கும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டது முதல் சமுதாயப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வரும் மாநிலத் தலைவரின் பணி மேன்மேலும் சிறக்க, இன்னும் பல பிறை கண்டு வாழ்வாங்கு வாழ்ந்து சமுதாயப்பணியாற்றிட அன்புடன் வாழ்த்துவதாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள பண்பாட்டுக் கழக மாநில காப்பாளர்களில் ஒருவரான மோதூர் முனுசாமி அவர்கள், நாற்பதாண்டு கால சமுதாயப்பணியில் தங்கள் தலைமையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மனநிறைவு கொள்வதாகவும், எப்போதும் அன்பு பாராட்டும் பரந்த உள்ளம் நூறாண்டு கடந்து வாழட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் மற்றும் பலவேறு கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் த.வீ.க.ப.கழக மாநிலத் தலைவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.