தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
இராஜகம்பளத்தாரின் ஊணோடும், உயிரோடும் இரண்டறக் கலந்தவர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனார் பெயரில் போக்குவரத்துக்கழகம் மற்றும் மாவட்டம் அமைய ஊன்றுகோலாக இருந்தவர் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள். மேலும் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எர்ர கொல்லவார் பிரிவை MBC பட்டியலில் சேர்க்க துணை நின்றதோடு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் முயற்சியால் மாவீரன் வீரபாண்டியனாருக்கு வாஜ்பாயி தலைமையிலான மத்திய அரசு தபால்தலை வெளியிட்டபோது, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவிற்கு அன்றைய தமிழக முதல்வர் கலைஞரை அழைத்து வந்ததோடு, தமிழகம் முழுவதுமுள்ள கம்பளத்தார்கள் விழாவில் பங்கேற்க ஏதுவாக பேருந்து சேவையை இலவசமாக வழங்கியவர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்கள்.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழாவிற்கு தலைமை விருந்தினராக வரவேண்டுமென்று இறுதி நேரத்தில் தொலைபேசியில் விடுக்கப்பட்ட அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டதோடு, திடீரென அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு, தொகுதியை விட்டு அமைச்சர்கள் யாரும் வெளியே போகக்கூடாது என்ற தலைமையின் கட்டளைக்கு தளர்வு வாங்கி முப்பெரும்விழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அவர்கள் என்பதை நன்றியுடன் நினைவுகூறக் கடமைப்பட்டுள்ளோம்.
இங்ஙணம் கம்பளத்தார்களின் ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் பங்காற்றிவரும் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் பல்லாண்டு வாழ வீரசக்கதேவி அருள்புரிய வேண்டுமாய் கம்பளத்தாரின் சார்பில் வேண்டி, நீடித்த ஆயுலோடும், ஆரோக்கியத்தோடும் வாழ கம்பளத்தாரின் சார்பில் வாழ்த்துகிறோம்.