ஒன்றியக்கழக செயலாளர் செல்வராஜ் விழாவில் கனிமொழி கருணாநிதி!

தூத்துக்குடி மாவட்டம், புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் திரு.M.செல்வராஜ் ஏற்பாட்டில், ஒன்றிய கழக திமுக சார்பில், கலைஞர் மு.கருணாநிதியின் 98-வது பிறந்தநாளில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா புதூர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி. இந்த நிகழ்ச்சிக்கு சமூகநலத்துறை அமைச்சர் மாண்புமிகு P.கீதாஜீவன் M.L.A அவர்கள் தலைமை வகித்தார், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு மார்கண்டேயன் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் P.ஜெகன்பெரியசாமி அவர்களும் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் R.மும்மூர்த்தி அவர்களும் செயற்குழு உறுப்பினர் RRK அவர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.