இந்திய கிரிக்கெட்டிற்கு கபில் தேவ்! - கைப்பந்திற்கு கபிலன்!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள 66 மேட்டுப்பட்டடியைச் சேர்ந்த இளைஞர் ம.கபிலன் (17). விவசாயத் தம்பதிகளான திரு. மகேந்திரன் திருமதி. கெஜலட்சுமி ஆகியோரின் மகனான கபிலன், மாணவப்பருவத்திலிருந்தே கைப்பந்து விளையாட்டில் ஆர்வமிக்கவர்.
கைப்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் பள்ளி பேட்டிகளில் இருந்தே தயாராகிவந்த கபிலனுக்கு பெற்றோர்களும் தங்களாலான உதவிகலை செய்து வந்தனர். தொடர்ந்து தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி வந்த கபிலன், இதுவரை 6 தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி சமீபத்தில் இரான் நாட்டில் நடந்து முடிந்த 14-வது ஆசிய U-18 சாம்பின்ஷிப் போட்டியில் நம் நாட்டிற்காக விளையாடி வெங்கல பதக்கம் பெற்றதோடு சிறந்த செட்டர் பிரிவில் இரண்டாவதாக வந்து பெருமை சேர்த்துள்ளார்.
தற்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜ கல்லூரியில் முதலாமாண்டு BBM பிரிவில் சேர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டிற்கு கபில்தேவ் என்பது போல் கைப்பந்து போட்டிற்கு கபிலன் என்று பெயர் சொல்லுமளவிற்கு சாதனைகள் புரிய கபிலனை வாழ்த்துகிறோம்.