மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள் - மதுரையில் திரள விடுதலைக்களம் அழைப்பு
திருமலை நாயக்கர் 437வது பிறந்த நாள் விழா மதுரையில் மார்ச் 8-ம் தேதி முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன ராவ் தலைமையில் தமிழ் நாடு தெலுங்கு சம்மேளனம் தலைவர் வேங்கட்ட விஜயன் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தொட்டிய நாயக்கர் சமுதாய சொந்தங்கள் கலந்து கொள்ள கோரி விடுதலைக்களம் சார்பில் கிராமங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. (01.02.2020) இன்று சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் உலிபுரம் கிராமத்தில் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் விழாவில் சொந்தங்கள் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.