புகழ்பெற்ற IIIT கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை வென்ற திவ்யபிரதா-வுக்கு வாழ்த்துகள்!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு. பாலகிருஷ்ணன் சென்னையா. சென்னையிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார். இவரின் துணைவியார் திருமதி. லதா பாலகிருஷ்ணன். இத்தம்பதியினருக்கு செல்வி. B.திவ்யபிரதா மற்றும் B.வர்ஷினி என்ற இரண்டு மகள்களும், B.தருண் என்ற மகனும் உள்ளனர். இதில் வர்சினி 10-ஆம் வகுப்பும், தருண் 9-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
மூத்த மகள் திவ்யபிரதா சென்னை முகப்பேரிலுள்ள வேலாம்மாள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டே அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வான JEE தேர்வில் வெற்றிபெறுவதற்கான பயிற்சி பெற்றுவந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான JEE Mains போட்டித்தேர்வு முடிவில் திவ்யபிரதா 97 Percentile எடுத்து வெற்றிபெற்றார். இதன் மூலம் தேசிய அளவில் பிரசித்திபெற்ற சிறந்த பொறியல் கல்லூரிகளில் ஒன்றில் சேர்வதற்கான வாய்ப்பைப்பெற்றார். திவ்யபிரதா எதிர்பார்த்ததுபோலவே கேரளா மாநிலம் கோட்டயத்திலுள்ள IIIT (Indian Institute of Information Technology) என்ற கல்லூரியில் கணிப்பொறியியல் படிப்பு கிடைக்கப்பெற்று அக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இராஜகம்பளத்தார் இனத்தில் இருந்து JEE தேர்வில் தேர்ச்சி பெற்று "Institutes of National Importance" அங்கிகாரம் பெற்ற IIIT-ல் சேர்ந்துள்ள முதல் பெண் திவ்யபிரதா என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே JEE Advanced தேர்வில்
தேர்ச்சி பெற்று IIT- Delhi ல் படித்துக்கொண்டிருக்கும் செல்வன். ஹரிஹரசுதன் நாகராஜன் மற்றும் NIT கோழிக்கோடு பேராசிரியர் Dr. கார்த்திகேயன் ஆகியோர் திவ்யபிரதாவுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டியுள்ளனர்.
இதேபோல் தானும் JEE போட்டித்தேர்வுக்கு தயாராக விருப்பமுள்ள நமது சமுதாய மாணவ, மாணவியர் திவ்யபிரதா வழிகாட்ட முன்வந்துள்ளார்.
திவ்யபிரதாவுக்கு கம்பளத்தாரின் மனமார்ந்த வாழ்த்துகள்..