ஆப்ரிக்க நாட்டின் கரும்புத்தோட்ட வேலைக்கு ஏன் இந்தியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்?
தென்னாபிரிக்காவை பிடித்த வெள்ளையர்கள் ஏன் அங்கிருந்த ஜூலு (Zulu) பூர்வகுடிகளை கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய வைக்காமல் இந்தியர்களை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து கூட்டி வந்தார்கள்?
காரணம் ஜூலுக்கள் போர்க்குடிகள் என்பது தான்.
ஜூலு ஆண்கள் ஒரே ஒரு வேலை மட்டும் தான் பார்ப்பார்கள். அது போர் செய்வது மட்டும் தான். ஜூலு ஆண்களின் சம்பாத்தியம் என்பது போரில் வென்று கைப்பற்றி வரும் பொருட்களும், காசு, பணம் மட்டும் தான். போர் இல்லாத நாட்களிலும் போர் பயிற்சி தான் எடுப்பார்களே தவிர, வீட்டு வேலை, விவசாய வேலை என வேறு எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். விவசாயம், வீட்டு வேலை எல்லாம் ஜூலு பெண்கள் தான் செய்வார்கள்.
எத்தனையோ எதிரிகளை போரில் வென்ற ஆங்கிலேயர்களுக்கு தண்ணி காட்டியவர்கள் ஜூலுக்கள் மட்டுமே. சும்மா வெறும் ஈட்டி, வில் அம்புடன் இருந்த ஜூலுக்கள், விரைவில் துப்பாக்கிகளை கையாள பழகிக் கொண்டார்கள். ஜூலுக்களை முழுமையாகத் தோற்கடித்து தென்னாப்பிரிக்கா முழுவதையும் கைப்பற்ற 20ம் நூற்றாண்டின் துவக்கம் வரை ஆங்கிலேயருக்கு தேவைப்பட்டது.
ஜூலு போர்முறை மிகவும் வித்தியாசமானது. இளவயதில் ஜூலூ ஆண்களை பள்ளிக்கு எல்லாம் அனுப்பமாட்டார்கள். போர்பயிற்சி கொடுத்தபின் போர்வீரன் வேலைதான். அதேபோல் ஓய்வு என்பதும் அவர்கள் அகராதியில் கிடையாது. போர்க்களத்தில் செத்தால் தான் ஓய்வு. இல்லையெனில் தளபதி மாதிரி சீனியர் பதவிகளை பெற்று படையிலேயே இருக்கலாம். அதனால் அவர்களும் களத்திலேயே தான் உயிரை இழப்பார்கள்.
போர் துவங்கியபின் ஜூலு படையணிகளில் உணவு எதுவும் கொண்டு செல்லப்படாது. ஒவ்வொரு ஜூலு வீரனும் போர் முடியும்வரை உண்ணாவிரதம் தான் இருக்கவேண்டும். இதனால் பெருமளவு வண்டிகளில் உணவு கொண்டு செல்வது தவிர்க்கப்பட்டது. போர் நீண்டநாட்கள் நீடித்தால் ஒன்று ஜூலு வீரன் பட்டினி கிடக்க வேண்டும் அல்லது எதிரணியின் உணவு சப்ளை வண்டிகளைக் கைப்பற்றி உண்ணவேண்டும்.
ஜூலுக்கள் போர்க்கைதிகளைப் பிடிப்பதும் கிடையாது, சரணாகதி அடைவதும் இல்லை. சரணாகதி என்ற கான்செப்டே ஜூலுக்கள் அகராதியில் கிடையாது. அவர்களும் சரண்டையமாட்டார்கள். எதிரிகளையும் சரணடைய விடமாட்டார்கள்.
ஜூலு வீரன் போர் புரிந்து மட்டுமே இறப்பான், பின்வாங்க மாட்டான். அவனது தளபதிகளாக போரை நிறுத்டி ராஜதந்திர ரீதியில் பின்வாங்க செய்தால் மட்டுமே பின்வாங்குவார்கள்.
அதேபோல் அவர்களிடம் எதிரிகள் சரணடைந்தால் சித்தரவதையும் செய்யமாட்டார்கள், ஜெயிலிலும் போடமாட்டார்கள். கொன்றுவிடுவது மட்டுமே வழக்கம்.
இவர்களை எப்படி கரும்புதோட்டங்களில் விவசாய வேலை பார்க்கவைக்க முடியும்? அதனால் தான் இந்தியர்களை கூட்டிக்கொண்டு சென்றார்கள்.