வீரியம் குறையாத விஜயநகர விதைகள்! சர்வேதேச அளவில் சாதிக்க வந்துவிட்டான் தங்கமகன்!

காலங்கள் கடந்தாலும் கம்பளத்தாரின் வீரியம் குறையவில்லை. சக்கர வியூகங்களை தகர்த்தெரியும் போர்க்குடியில் பிறந்தர்களுக்கு, "நீட்"டெல்லாம் பொருட்டல்ல என்று ஏறி அடிக்கத்தொடங்கிவிட்ட கம்பளத்து சிங்கங்கள், விளையாட்டுப்போட்டியை மட்டும் விட்டுவிடவா போகிறார்கள். முடிவெடுப்பது மட்டும்தான் தாமதம், களம் மட்டும் இறங்கிவிட்டால் சரித்திரத்தின் பக்கங்கள் கம்பல்த்தாரை மட்டும்தான் எழுதும். ஆம், விஜயநகரத்தின் தீராத வீரம் இருநூற்றாண்டு ஓய்வுக்குப்பின், விருட்சமாக முட்டுகிறது.
அந்த விருட்சத்தில் ஒன்றுதான், நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த மாணவன் M.சந்துரு. புதுப்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் +11 படித்துவரும் மாணவரான இவர், கடந்த 30'ஆம் தேதி கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப்போட்டியில் 1500 மீட்டர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
சாதாரண குடும்பத்தைச்சேர்ந்த மாணவன் M.சந்துரு, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளதை அடுத்து, சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
மாணவன் சந்துரு thottianaicker.com-க்கு அளித்த பிரத்யோக பேட்டியின் வாயிலாக நாம் புரிந்துகொள்ள முடிவது, தன் குடும்பத்தின் தகுதிக்கு மீறியே இதுவரை வளர்ந்துள்ளது தெரியவருகிறது. கவலை கொள்ளாதே சாதனையாளனே, கம்பளத்தார் கூட்டம் நேற்றைய மன்னர்களை மட்டுமே கொண்டாடித்தீர்க்கும் இனமல்ல, உம்போன்ற நாளைய சரித்திர நாயகர்களுக்கும் ஊன்றுகோளாக இருக்குமென்பது நிச்சயம்.
தடகள வீரன் சந்துரு அவர்களின் பிரத்யோக பேட்டி விரைவில் உங்கள் thottianaicker.com-யூடியூப் சேனலில்...