வீழ்ந்த இனத்தை மீட்டெடுக்க மீண்டும் உதயமாகும் கங்காதேவிகள்!
கங்காதேவியின் கடைக்கண் அசைவில் உருவான நாயக்கர் சாம்ராஜ்ஜியம், இருநூறு ஆண்டுகளாக அடையாளத்தை இழந்து, கடும் வீழ்ச்சியை சந்தித்த கம்பளத்தார் இனத்தை மீண்டும் மீட்டெடுக்க வீறுகொண்டு எழுந்துவிட்டது இளையதலைமுறை நவீன கங்காதேவிகள். அதற்கு கட்டியம் கூறும் வகையில் உள்ளது சமீபகாலமாக இளையதலைமுறையின் சாதனைப் பட்டியல்.
அந்தவகையில் கோவையில்,பீனிக்ஸ் உலக சாதனைக்காக நடத்தப்பட்ட சிலம்பாட்டப்போட்டியில் கோவைப்புதூர் திரு.மாரிமுத்து அவர்களின் அன்புமகள் M.சாத்விகா, 70 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். கோவை, மைல்கல் பகுதியில் உள்ள "Peepal Prodigy" பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
அன்புமகள் M.சாத்விகா ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புமகள் சாத்விகா மேலும் பல வெற்றிகளைப்பெற்று சாதனை புரிய வாழ்த்துகிறோம்.