ஆக்கி போட்டியில் தடம் பதிக்கும் அரசு பள்ளி மாணவன் சுபாஷ்!
Thottianaicker
May 11, 2021
மாநிலங்களுக்கு இடையேயான 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தேசிய சப்-ஜுனியர் ஆக்கி போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ரெய்பூரில் தோற்று (11.05.2021) தொடங்கி 21.05.2021 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-வகுப்பு மாணவர் சுபாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அணிக்காக விளையாட தேர்வாகியுள்ள மாணவன் சுபாஷை, பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல்காதர், உடற்பயிற்சி ஆசிரியர் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் பாராட்டினார். முன்னதாக, உடுமலையில் கம்பளத்தார் சமுதாயத்தினர் நடத்திவரும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பில் 2019-ஆம் ஆண்டு மாணவன் சுபாஷின் சாதனையை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டுச்சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கி உற்சாகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.