🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இளஞ்சூரியன்கள்- திருச்சுழி .திரு.G.கணேசமூர்த்தி

திரு.G.கணேசமூர்த்தி அவர்கள் 07.05.1984-ல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள காத்தான்பட்டி கிரமத்தில் திரு.குமரய்யா – திருமதி.பாண்டியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் நடுநிலைப் பள்ளி வரை கல்வி பயின்றவர், பஞ்சாலைத் தொழிலாளியாக தன் வாழ்வைத்துவங்கினார். இவருக்கு திருமணமாகி திருமதி.G.அனுசுயா என்ற மனைவியும், G.கதிரவன் என்ற மகனும் G.சமீரா என்ற மகளும் உள்ளனர். நடுநிலைப்பள்ளி மட்டுமே கல்விபயின்றிருந்தாலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாகம் நிறைந்தவராக இருந்தார். இதனால் மில்தொழிலாளியாக இருந்துகொண்டே ஓய்வு நேரங்களில் பஞ்சாலையில் உள்ள கம்யூட்டரை இயக்கக் கற்றுக்கொண்டார். இவரின் ஆர்வத்தை கண்டுகொண்ட உயரதிகாரிகள் இவரை தரக்கட்டுப்பாட்டு பிரிவில் (Quality Control) சூப்பர்வைஸராக பதவி உயர்த்தியது. இதனால் மேலும் உற்சாகமானவர்’ கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் இணைந்து முறைப்படி ஹார்டுவேர் நெட் ஒர்க்கிங் பயின்று பட்டயம் பெற்றார். இது அவருக்கு மேலும் தன்னம்பிக்கையை வளர்த்தது, இதன் பலனாக, பகுதிநேர பணியாக 1996-ல் கேபிள் டிவி ஆபரேட்டராக மாறினார். படிப்படியாக பல்வேறு துறைகளிலும் தன்னை கட்டமைத்துக் கொண்டவர், 2011- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை தனியாருக்கு வழங்கிய பொழுது. அந்த டெண்டரில் கலந்துகொண்டு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகரில் ஒளிபரப்பும் உரிமையை பெற்றார். அப்பொழுது “தென்றல் டிவி” என்ற பெயரில் புதிய டிவி சேனலை தொடங்கி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்தில் ஒளிபரப்பு செய்யத்துவங்கியவர் பின்னர் அதே மாவட்டத்திற்குட்பட்ட அருப்புக்கோட்டை, காரியபட்டி வட்டங்களுக்கும் ஒளிபரப்பை விரிவுபடுத்தினார்.


தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, வளப்படுத்திக் கொள்வதோடு நில்லாமல், சமுதாயத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். சிறுவயது முதலே தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராகி சமுதாய சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர், தற்பொழுது தவீக பண்பாட்டுக் கழகத்தில் விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளராக உள்ளார். மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து குரல்கொடுப்பவர், தவீக பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் முன்னனி தலைவர்களுடன் இணைந்து, சென்னை சென்று, அமைச்சர் பெருமக்களை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி, வருடாவருடம் விருதுநகரிலிருந்து பெரும் இளைஞர்களை திரட்டி, ஜோதியுடன் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.  சமுதாய நிகழ்ச்சிகள் எங்கு, எந்த அமைப்புகள் நடத்தினாலும் பாரபட்சமின்றி தவறாது கலந்துகொண்டு ஊக்கமளிப்பவர், விடுதலைக்களம் சார்பில் விருதுநகரில் -2019 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டிற்கு, அதன் தலைவர் கொ.நாகராஜன் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, அம்மாநாட்டின் வெற்றிக்காக பாடுபட்டவர், 500 கிமீ க்கு அப்பால், சென்னையில் உள்ள வீகபொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நடத்திய இணையதள துவக்க விழாவிலும் நண்பர்கள் புடைசூல கலந்து கொண்டவர், ஆதலால் அனைத்து அமைப்புகளின் நன்மதிப்பைப்பெற்றவர். 


மேலும் க.சுப்பு கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, மாவீரன் கட்டபொம்மன் நினைவு நாளில், கயத்தாறு சென்று அஞ்சலி செலுத்துதல், மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாளில் மதுரை சென்று மரியாதை செய்தல் போன்றவற்றில் தொடர்ந்து வருடம்தோறும் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில், சமுதாயம் தவிர, தீவிர அரசியலிலும் நாட்டமுடையவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக உள்ளார். கட்சி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும், போராட்டங்களிலும் கலந்து தவறாது கலந்து கொள்பவர், ஆதலால் அக்கட்சியின் முன்னனி மாவட்ட தலைவர்களின் அன்பைப்பெற்றவராக திகழ்கிறார். சமூகத்திற்கு தொண்டு செய்யக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாதவர், இளைய தளபதி நடிகர் திரு.விஜய் மக்கள் இயக்கத்திலும் முக்கிய பொறுப்பில் உள்ளவர், அவர் பிறந்தநாளையொட்டி மாபெரும் இரத்ததான முகாம் நடத்தி “குருதிக்கொடை” அளித்துவருகிறார்.

எல்லாத்துறைகளிலும் பிரகாசிக்கும் திறமையுள்ள திரு.கணேசமூர்த்தி அவர்கள் வரும் காலங்களில் தீவிர அரசியலிலும் பங்கெடுத்து உரிய பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved